கல்யாணமாகி சில வாரங்களிலேயே தாலாட்டு பாடும் விஜய் டிவி புகழ்!

சென்னை : விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் புகழ்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இவர் தோன்றி தன்னுடைய டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து தன்னை பிரபலமாக்கிய குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூட நேரமில்லாமல் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் புகழ்.

விஜய் டிவி புகழ்

விஜய் டிவி புகழ்

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இந்த ஷோவில் இவர் நடத்திய காமெடி சாம்ராஜ்யம் வேறு லெவலில் ரசிகர்களை ஈர்த்தது.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்த புகழ், பவித்ரா, தர்ஷா உள்ளிட்டவர்களை வைத்து செய்த காமெடிக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் நடுவர்களையும் விட்டு வைக்காமல் இவர் செய்த லொள்ளு தர்பாரை ரசிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். விளைவு இந்த ஷோவை முடிக்கும்போது இவர் கைவசம் 8 படங்கள் இருந்தன.

படங்களில் பிசியான புகழ்

படங்களில் பிசியான புகழ்

தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கப்பட்ட போது அதில் பங்கேற்கக்கூட நேரமில்லாமல் படங்களில் பிசியாகிவிட்டார் புகழ். ஆனாலும் பழசை மறக்காமல், தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இடையிடையே வந்து போனார். அதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் காதலியை மணமுடித்தார்.

புகழின் கலக்கல் திருமணம்

புகழின் கலக்கல் திருமணம்

இவர்களது திருமணம் சென்னையில் சிறப்பான வகையில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த திருமணத்தை தொடர்ந்து தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார் புகழ். ஆனாலும் விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடிகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

புகழ் பாடிய தாலாட்டு

புகழ் பாடிய தாலாட்டு

இதனிடையே தற்போது தான் புதிதாக வாங்கிய நாய்க்குட்டிக்கு தாலாட்டு பாடியுள்ளார் புகழ். ஆரிரோ ஆராரிரோ என்ற தெய்வத்திருமகள் படத்தின் பாடலை பாடியுள்ள புகழ், அந்த நாய்க்குட்டிக்கு பெயரும் வைத்து விட்டாராம். இகிமுஸ் என்று பெயர் வைத்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னடைய கால்களில் போட்டு இகிமுசிற்கு தாலாட்டு பாடியுள்ளார் புகழ்.

நாய்க்குட்டிக்கு தாலாட்டு

நாய்க்குட்டிக்கு தாலாட்டு

இவருக்கு திருமணமாகி சில வாரங்களே முடிந்துள்ளன. இதனிடையே, தன்னுடைய நாய்க்குட்டிக்கு இவர் தாலாட்டு பாடி, அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் உமா ரியாஸ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X