மிரட்டல் லுக்.. கையில் கன்னுடன் விஜய் டிவி புகழ்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: கையில் கன்னுடன் விஜய் டிவியின் புகழ் நடத்தியிருக்கும் புதிய போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் சமீப காலமாக காமெடி கிங்காக அனைவரையும் சிரிக்க வைத்து வருபவர் புகழ்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் ரம்யா பாண்டியனிடம் வழிந்து தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

ஷகிலாவுடன் கோமாளியாக
தனது எதார்த்தமான நகைச்சுவை, டைமிங் சென்ஸ், பாடி லாங்குவேஜ் என பெரும் ரசிகர் பட்டாளத்தை கூட்டி வைத்துள்ளார் புகழ். தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ஷகீலாவுக்கு கோமாளியாக உள்ளார் புகழ்.

குவிந்து கிடக்கும் ரசிகர்கள்
ஒவ்வொரு சீனிலும் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்களும் டயலாக் டெலிவரியும் வேற லெவலில் அவரை கொண்டு செல்கிறது. அவருடைய ரியாக்ஷன்ஸ், பாடி லாங்குவேஜ்ஜுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்றால் மறுபக்கம், அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

வலிமை படத்தில் புகழ்
புகழின் திறமையால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் சந்தானத்தின் சபாபதி படத்திலும் தமிழ் நடிப்பதாக கூறப்பட்டது.

புகழின் புதிய போட்டோ ஷுட்
இந்நிலையில் ஆக்ஷன் இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் புகழ் நடிப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. தற்போது புகழ் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

வில்லன் லுக்கில்..
வில்லன் லுக்கில் கன்னை நெற்றியில் வைத்துக்கொண்டும், பாழாகிப் போன பழைய காரின் மீது அமர்ந்தப்படியும் துப்பாக்கியுடன் குறி பார்ப்பது போன்றும் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் புகழ். ஏற்கனவே தனது சுருட்டை முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்து போட்டோ ஷுட் நடத்தினார் புகழ்.

சம்பவத்துக்காக வெயிட்டிங்
தற்போது புகழ் நடத்தியிருக்கும் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள், வரும் குக் வித் கோமாளி எபிசோடில் சிறப்பான சம்பவத்துக்காக வெயிட்டிங் என பதிவிட்டு வருகின்றனர். இன்னும் பலர் உங்கள் திறமைக்கு நீங்கள் பல உயரங்களை தொடுவீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











