ஷங்கர் ஆபிஸில் இருந்து வந்த அழைப்பு..நிஜத்திலும் கோமாளியாக்கினார்கள்..விஜய் டிவி 'புகழ்' உருக்கம்!

சென்னை: ஷங்கர் ஆபிஸில் இருந்து கால் பண்ணுவதாக கூறி தன்னை ஏமாற்றிய அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்துள்ளார் விஜய் டிவியின் புகழ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் ரம்யா பாண்டியனிடம் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

சீசன் 2வில் கோமாளியாக

சீசன் 2வில் கோமாளியாக

தனது எதார்த்தமான நகைச்சுவை, டைமிங் சென்ஸ், பாடி லாங்குவேஜ் என பெரும் ரசிகர் பட்டாளத்தை கூட்டி வைத்துள்ளார் புகழ். தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள புகழ், பவித்ரா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர் என பலருடனும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தி வருகிறார்.

குவிந்து கிடக்கும் ரசிகர்கள்

குவிந்து கிடக்கும் ரசிகர்கள்

ஒவ்வொரு சீனிலும் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்களும் டயலாக் டெலிவரியும் வேற லெவலில் அவரை கொண்டு செல்கிறது. அவருடைய ரியாக்ஷன்ஸ், பாடி லாங்குவேஜ்ஜுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்றால் மறுபக்கம், அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

வலிமை படத்தில் புகழ்

வலிமை படத்தில் புகழ்

புகழின் திறமையால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் சந்தானத்தின் சபாபதி படத்திலும் புகழ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டான்

சிவகார்த்திகேயனின் டான்

இதனிடையே ஆக்ஷன் இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் புகழ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதேபோல் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் புகழ்.

பரம்பரையில் முதல் முறையாக

பரம்பரையில் முதல் முறையாக

அண்மையில் புகழ் சொந்தமாக கார் வாங்கினார். தன்னுடைய பரம்பரையிலேயே முதல் முறையாக தான் கார் வாங்கியிருப்பதாக கூறி வீடியோவை வெளியிட்டு உருக வைத்தார்.

இயக்குநர் ஷங்கர் ஆபிஸ்

இயக்குநர் ஷங்கர் ஆபிஸ்

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள புகழ், தான் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து உருக்கமாக கூறியுள்ளார். அதாவது, ஒருநாள் இயக்குநர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு என்னை வரச் சொன்னார்.

நிஜத்தில் கோமாளி அல்ல

நிஜத்தில் கோமாளி அல்ல

நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த புகழ், நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல' என உருக்கமாக கூறியிருக்கிறார் புகழ்.

More from Filmibeat

Read more about: pugazh புகழ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X