Pugazh: இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை.. அப்பாவாகப்போகும் விஜய் டிவி புகழ்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ் மனைவி பென்ஸி நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், எடுத்துக் கொண்ட பேபி பம்ப் போட்டோஷூட்டை சற்று முன் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த புகழ் தமிழ் சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கி வலிமை, சபாபதி, டிஎஸ்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனது காதலியான பென்ஸியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட புகழ் திருமண நாளை முன்னிட்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் சூப்பரான ஹேப்பி நியூஸை அறிவித்து ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.
விஜய் டிவி புகழ்: குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வந்த புகழ் சிக்ஸர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காமெடியனாக அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து தாதா 87, காக்டெயில், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போல இவரும் ஹீரோவாக தற்போது ஜூகீப்பர் படத்தில் நடித்து வருகிறார். கூடிய சீக்கிரமே அந்த படம் திரைக்க வர காத்திருக்கிறது.
அப்பாவாக போகிறார்: கடந்த ஆண்டு தனது காதலியான பென்ஸியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட புகழ் விரைவில் அப்பாவாகப் போகிறேன் என்கிற சந்தோஷமான அறிவிப்பை தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

விஜய் டிவி புகழின் மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிந்த ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
ஈடு இணையே இல்லை: "என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பென்ஸி புகழ்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகியுள்ளார் புகழ்.


Click it and Unblock the Notifications











