ப்பா.. என்னவொரு குத்தாட்டம்.. இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணத்தில் நடனமாடிய ரக்ஷன்.. செம வைரல்!
சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் அதே படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியனுக்கும் நேற்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
துல்கர் சல்மானுக்கு நண்பனாகவும், நிரஞ்சனியின் காதலனாகவும் நடித்த நடிகர் ரக்ஷன் திருமண விழாவில் கலந்து கொண்டு மாப்பிள்ளையுடன் போட்ட குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், இயக்குநர் தேசிங் பெரியசாமியின் திருமண புகைப்படங்களும் தீயாக பரவி வருகின்றன.

காதல் கல்யாணம்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியை காதலித்து கல்யாணம் செய்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. குடும்பங்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் சூழ கோலாகலமாக நேற்று திருமணம் நடைபெற்றது. பாபா முத்திரை எல்லாம் காட்டி இயக்குநர் தேசிங் பெரியசாமி கொடுத்த போஸ் செம வைரல் ஆனது.

ரக்ஷனோட ஆளு
இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுக்கு ரிது வர்மாவும், ரக்ஷனுக்கு நிரஞ்சனு அகத்தியனும் ஜோடியாக நடித்திருந்தனர். தனது ரீல் ஜோடியின் திருமணத்திற்கு மிஸ் பண்ணாமல் விஜய் டிவியின் ரக்ஷன் கலந்து கொண்டு இருவருடன் இணைந்து எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.
இயக்குநருடன் டான்ஸ்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை தேசிங் பெரியசாமி உடன் இணைந்து செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து மணமக்களை வாழ்த்தி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

திருமண போட்டோஸ்
குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மணமக்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அடுத்த படம்
முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் தேசிங் பெரியசாமி அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவிலேயே தேசிங் பெரியசாமியின் அடுத்த தரமான சம்பவம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றே தெரிகிறது.

ஹனிமூனுக்கு எங்கே
ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் மாலத்தீவில் சுற்றுலா செய்து வரும் நிலையில், இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனி அகத்தியன் தம்பதியினர் தங்களின் ஹனிமூனுக்கு எங்கே செல்லப் போகின்றனர் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கூடிய விரைவிலேயே ஹனிமூன் ரொமான்டிக் போட்டோக்களும் வெளியிட்டு வைரலாக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











