விரைவில் பிக்பாஸ் சீசன் 6.. விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் ப்ரமோ.. வீ ஆர் வெயிட்டிங்!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அந்த சேனலின் முன்னணி நிகழ்ச்சியாக காணப்படுகிறது.

5 சீசன்களை இந்த நிகழ்ச்சி சிறப்பான வகையில் கடந்துள்ளது. மேலும் இதன் வரவேற்பை பார்த்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நேரலையாக நடத்தப்பட்டது.

அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி சேனலில் அகிமாக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வந்த இந்தத் தொடர் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது. ஆனாலும் 5 சீசன்களை போல இந்த நிகழ்ச்சிக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நிகழ்ச்சி ரசிகர்களை கவரவே செய்தது.

தொகுப்பாளர் கமல்ஹாசன்

தொகுப்பாளர் கமல்ஹாசன்

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது.

முதன்மை நிகழ்ச்சிகள்

முதன்மை நிகழ்ச்சிகள்

எப்போதுமே விஜய் டிவியின் முதன்மை தொடர் வரிசையில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் இடம்பெற்றுவிடும். அந்த வகையில் கடந்த 5வது சீசன் வரை இந்த நிகழ்ச்சி சிறப்பாகவே களைகட்டியது. முதல் சீசன் மிகச்சிறப்பாக அமைந்த நிலையில், மற்ற சீசன்கள் அந்த வகையில் ரசிகர்களை கவரவில்லை என்ற விமர்சனமும் காணப்படுகிறது.

நிகழ்ச்சியை சிறப்பாக்க முயற்சிகள்

நிகழ்ச்சியை சிறப்பாக்க முயற்சிகள்

கடந்த சீசனில் ராஜு டைட்டில் வின்னராக மாறினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே இவர் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தார். பிரியங்கா உள்ளிட்டவர்களும் ரசிகர்களை தங்களது செயல்பாடுகள் மூலம் அதிகமாகவே ரசிக்க வைத்தனர். இந்நிலையில் சீசன் 6ஐ மேலும் சிறப்பாக்க விஜய் டிவி பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிறப்பான போட்டியாளர்கள்

சிறப்பான போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டும் வகையில் சிறப்பான போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் பேச்சளவிலேயே உள்ளது. நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X