விஜய் டிவி ஆங்கர் டிடியா இது.. என்னா ஸ்டைல்.. சும்மா அசத்துறாங்களே!

சென்னை : விஜய் டிவியின் பிரபல ஆங்கர் டிடி சமீப காலங்களில் அதிகமான சுற்றுலாக்கள், போட்டோஷுட்கள் என அசத்தி வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் டிடி முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் டிடி பதிவிட்டுவரும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

விஜய் டிவி ஆங்கர் டிடி

விஜய் டிவி ஆங்கர் டிடி

விஜய் டிவியின் பிரபல ஆங்கர் டிடி அந்த சேனலின் பிரதான தொகுப்பாளராக விளங்குகிறார். துவக்கத்தில் ஏராளமான ஷோக்களில் இவரை காண முடிந்தது. அந்த வகையில் இவரது ஷோக்கள் அதிகமான ரசிகர்களை ஈர்த்தது. ஆனால் தற்போது இவர் தன்னுடைய ஷோக்களை குறைத்துக் கொண்டுள்ளார்.

விஐபி ஷோக்களில் ஆங்கரிங்

விஐபி ஷோக்களில் ஆங்கரிங்

முக்கியமான விஐபிக்களின் ஷோக்களில் மட்டுமே இவரை காண முடிகிறது. படவிழாக்களிலும் இவரை அதிகமாக காண முடிகிறது. இது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து இவரது போட்டோஷுட்களை பார்ப்பதற்காகவே இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாக்கள்

வெளிநாட்டு சுற்றுலாக்கள்

இதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா கிளம்பி விடுகிறார். அந்த இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவர் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

படங்களிலும் கவனம்

படங்களிலும் கவனம்

இதனிடையே தமிழ் படங்களிலும் இவரை அதிகமாக காண முடிகிறது. தனுஷ் இயக்கத்தில் ப. பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இதையடுத்து சில படங்களில் இவர் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்ல் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

 சிறப்பான புகைப்படம்

சிறப்பான புகைப்படம்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் டிடி. இவரது சமீபத்திய போட்டோஷுட்களில் அழகு அள்ளுகிறது. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கையில் காபி, முகத்தில் கண்ணாடி சகிதமாக மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார்.

லிகர் பிரமோஷன்

லிகர் பிரமோஷன்

தொடர்ந்து லிகர் படத்தின் பிரமோஷன்களுக்காக மற்றொரு கெட்டப்பில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் இவர் அணிந்துள்ள உடை மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது. புகைப்படங்களும்தான். சமீபகாலங்களில் சற்றே மெலிந்து அழகாக காணப்படுகிறார் டிடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X