Baakiyalakshmi :பிரச்சினைகளால் முழிபிதுங்கும் கோபி.. எல்லாத்தையும் அனுபவிச்சிட்டுதான் போவாரு போல!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

தான் கோபியின் வீட்டில்தான் இருப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்யும் ராதிகா, கோபியின் குடும்பத்தினருடன் மல்லுக்கு நிற்கிறார்.

தான் பாக்கியாவின் வீட்டில் இருப்பதால் ஒரு காபி குடிக்கக்கூட வாய்ப்பில்லாமல் முழிபிதுங்குவதாக காட்டப்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi new promo makes its fans more thrilling

பாக்கியலட்சுமி தொடர் புதிய ப்ரமோ : விஜய் டிவியின் முக்கியமான தொடராகவும் முதன்மையான தொடராகவும் மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கோபி மற்றும் அவரது மனைவி மற்றும் காதலை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்ட இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள், ரசிகர்களை பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி, ராதிகாவை கன்வின்ஸ் செய்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றும் என்ற அவரது நினைப்பில் மண் விழுகிறது. தன்னுடைய முதல் மனைவியிடம் அதிகாரத் தோரணையுடன் நடந்துக் கொண்டு, ராஜாவாக வலம்வரும் கோபி, ராதிகாவிடம் கூஜாவாக மாறுகிறார். அவரும் வேலைக்கு போவதால், அனைத்து வேலைகளையும் கோபியும் இணைந்து செய்ய வேண்டி வருகிறது.

தன்னுடைய கணவன் சம்பாதிப்பதால், இதையெல்லாம் அவரை செய்யவிடாமல் பார்த்துக் கொள்கிறார் பாக்கியா. அதனால் மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவந்த கோபி, ராதிகா கொடுக்கும் குடைச்சல்கள், அதனால் தன்னுடைய முதல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் கோபி, குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இதனால் ராதிகாவுடன் அதிகமான சண்டை ஏற்பட்டு, நடுரோட்டில் தள்ளாடி விழும் சம்பவமும் ஏற்படுகிறது.

இதையடுத்து தன்னுடைய அம்மாவின் அட்வைஸ்படி தன்னுடைய வீட்டில் அவர் தங்க நேரிடுகிறது. இதனால் கோபமடையும் ராதிகாவும் அங்கேயே வந்து தங்குகிறார். அது தன்னுடைய கணவனின் வீடு என்று அதற்கு விளக்கமும் கொடுக்கிறார். இதனால் மேலும் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார் கோபி. ராதிகா உரிமையுடன், அவரது வீட்டு சமையலறையை உபயோக்கப்படுத்த, பிரச்சினை மேலும் வெடிக்கிறது. ஈஸ்வரியால் அவர் அவமானப்படுத்தப்படுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi new promo makes its fans more thrilling

தொடர்ந்து இதுகுறித்து அவர் கோபியிடம் புகார் கூறுகிறார். தான் அவருடைய மனைவி என்னும்போது, ஈஸ்வரி ஏன் தன்னை இவ்வாறு நடத்துகிறார் என்று கேள்வி எழுப்புகிறார். ஆபிசில் தனக்கிருக்கும் அதிகப்படியான மரியாதையை சுட்டிக் காட்டும் ராதிகா, வீட்டில் இனியாகூட தன்னை மதிப்பதில்லை என்று கூறுகிறார். இதனிடையே, ராதிகா கொடுக்கும் காபியை குடிக்கும் கோபி, அந்த காபியின் கர்ணகடூரமான சுவையால் மிகவும் மோசமாக ஃபீல் செய்கிறார்.

இந்தத் தொடரிலிருந்து இன்னும் சில வாரங்களில் விலகவுள்ளதாக கோபியாக நடித்துவரும் சதீஷ், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், தொடரிலிருந்து விலகுவதற்குள், போதுமான அளவில் டார்ச்சரை அனுபவித்துவிட்டுத்தான் போவார் போல என்பதாக சீரியலின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இந்த கோபி கேரக்டருக்கு, சதீஷ்தான் பொருத்தமானவர் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X