Baakiyalakshmi :பாக்கியலட்சுமி குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்ட கோபி.. ராதிகாவை காணோமே!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்தத் தொடரில் ஹீரோவாக நடித்துவரும் கோபி, நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் இந்தத் தொடரிலிருந்து விலகவுள்ளதாக கூறிய நிலையில், அவரது ரசிகர்கள் அதுகுறித்து தங்களது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தனர்.

Vijay TVs Baakiyalakshmi serial actor gopi shares new photo of Baakiyalakshmi family

பாக்கியலட்சுமி குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட கோபி : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சேனலின் முன்னணி தொடராக சேனலின் டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டு வருகின்றன. இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் கோபி. இவர் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக காணப்படுகிறது.

தன்னுடைய சுயநலத்திற்காக பாக்கியா மற்றும் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறர் கோபி. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு, இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இனியா மற்றும் அவரது அப்பா இருவரும் கோபியுடன் வாழ்ந்துவந்த நிலையில், ராதிகாவிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இனியா, மீண்டும் தன்னுடைய அம்மாவிடமே சென்று விடுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial actor gopi shares new photo of Baakiyalakshmi family

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் கோபி, தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய வீட்டில் தங்க நேர்கிறது. இதையடுத்து ராதிகாவும் அங்கேயே வந்து தங்குகிறார். இதனால் அவருக்கும் ஈஸ்வரி உள்ளிட்டவர்களுக்கும் அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனிடையே, ஈஸ்வரியிடம் அதிகமாக திட்டுக்களை வாங்கும் ராதிகா, கோபியிடம் தொடர் புகார் கூறுகிறார்.

இதனிடையே, பழனிச்சாமியிடம் அதிகமாக பேசும் பாக்கியாவை பார்க்கும் கோபி, அவர்மீது சந்தேகம் கொள்கிறார். தொடர்ந்து அதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் புகார் கூறுகிறார். இதனிடையே, அவரை அடிக்க அவரது மகன்கள் எழில் மற்றும் செழியன் செல்கின்றனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலடையும் கோபி, அவர்களை ஏவிவிட்டு தன்னை அடிக்க ஆள் செட் செய்கிறாயா என்று கேள்வி எழுப்புகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial actor gopi shares new photo of Baakiyalakshmi family

இதையடுத்து, தனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆனதால் அவர் தன்னுடைய நடவடிக்கைகள் குறித்து எந்தவிதமான கேள்வியும் கேட்க முடியாது என்று பாக்கியா கூறுகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சதீஷ், அடுத்தடுதது தன்னுடைய தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பககத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தார் என்று புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியா, ஈஸ்வரி, ராமமமூர்த்தி, இனியா உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். ஆனால் ராதிகா அந்த புகைப்படத்தில் காணப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X