இங்கிலீஷில் வெளுத்துவாங்கும் தாத்தா.. கோபியால் கடுப்பான இனியா.. பாக்கியலட்சுமி சீரியலின் ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான பல எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

இந்தத் தொடரில் கோபி -பாக்கியா -ராதிகா கேரக்டர்கள் நாம் அன்றாடம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் கேரக்டர்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதனால் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அடுத்தடுத்த ப்ரமோக்களால் ரசிகர்களை இந்தத் தொடர் கட்டிப் போட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளன. அந்த வகையில் அந்த சேனலின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. வயது கடந்த காதலை மையமாக வைத்து இந்தத் தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. தொடரின் நாயகனாக கோபி, திருமணமாகிய மகன் வீட்டில் இருக்கும்போது தன்னுடைய காதலை புதுப்பித்துக் கொள்கிறார்.

கோபியின் இரண்டாவது திருமணம்

கோபியின் இரண்டாவது திருமணம்

அதையொட்டிய களேபரங்களும், விவாகரத்து நடவடிக்கையும், கோபியின் இரண்டாவது திருமணமும் என அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் இயக்குநர். திருமணமாகி வானத்தில் பறக்கும் கனவுடன் வலம்வந்த கோபிக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளே பரிசாக கிடைக்கிறது. இரண்டாவது மனைவியை சமாளிக்கும்வகையில் முழிபிதுங்கும் கோபியின் பிரச்சினைகள் அடுத்தடுத்து கதைக்கு சுவாரஸ்யங்களை கூட்டியுள்ளன.

 எழிலின் திருமணத்தை நடத்தும் பாக்கியா

எழிலின் திருமணத்தை நடத்தும் பாக்கியா

இந்தத் தொடரில் தன்னுடைய கணவன் கோபி விரும்பும் விவாகரத்தை கொடுக்கும் பாக்கியா, தன்னுடைய குடும்பத்தை சமாளிக்கவும், தன்னுடைய கணவனுக்கு வீடுகட்ட செலவழித்த தொகையை கொடுக்கும்வகையிலும் அடுத்தடுத்த கேட்டரிங் ஆர்டர்களை எடுத்து மிகவும் பாடுபடுகிறார். இதனிடையே தன்னுடைய மகன் எழிலின் காதலை தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, அவருக்கு அவர் மனதிற்கு பிடித்த அமிர்தாவையே திருமணம் செய்து வைக்கிறார்.

கேன்டீன் துவக்கவிழா

கேன்டீன் துவக்கவிழா

இவ்வாறு பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படும் நிலையில், ராதிகா வேலை செய்யும் மிகப்பெரிய நிறுவனத்தின் கேன்டீன் கான்டிராக்டையும் பாக்கியா கைப்பற்றுகிறார். இதனால் ராதிகா பொறாமைக்குள்ளாகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு செல்லவிரும்பும் கோபியின் அப்பா ராமமூர்த்தி மற்றும் இனியாவின் செயல்பாடுகளையும் கோபி மூலம் தடுத்து நிறுத்த முயல்கிறார்.

கடுப்பில் இனியா

கடுப்பில் இனியா


ராதிகாவிற்கு எப்போதும் சப்போர்ட்டாக காணப்படும் கோபி, தன்னுடைய அப்பாவை தடுக்க முடியாத நிலையில், மகளை தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியாவின் கேட்டரிங் கான்டிராக்ட் துவக்க விழாவிற்கு செல்ல முடியாதபடி செய்கிறார். தன்னுடைய அப்பாவின் சொல்லை மீறமுடியாமல் இனியா கடுப்பாகிறார். ராமமூர்த்தி மட்டும் விழாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

ஆங்கிலத்தில் கலாய்க்கும் தாத்தா

ஆங்கிலத்தில் கலாய்க்கும் தாத்தா

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத இனியாவை, ஆங்கிலத்தில் கலாய்க்கிறார் தாத்தா ராமமூர்த்தி. தன்னுடைய மகன் கோபியுடனும் ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார். பாக்கியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாத ராதிகா, இதுபோன்று இனியா அந்த கேன்டீன் துவக்கவிழாவில் பங்கேற்பதை தடுத்து, தன்னுடைய வில்லத்தனத்தை துவக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X