Baakiyalakshmi :அப்பாவிடம் சத்தியம் வாங்கும் இனியா.. அடுத்தடுத்த கேள்விகளால் திக்குமுக்காடும் கோபி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடரில் கோபி, ராதிகா மற்றும் பாக்கியா என லீட் கேரக்டர்கள் ரசிகர்களை தங்களது சிறப்பான நடிப்பால் கட்டிப் போட்டுள்ளன.
பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து வாங்கியுள்ள கோபி, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்த நிலையில், அவரது டார்ச்சரை தாங்க முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

அப்பாவிடம் சத்தியம் வாங்கும் இனியா :
விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர், இந்தத் தொடர் சேனலின் டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. மராத்தி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரை தழுவி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தமிழ் ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களையும் செய்து தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கன்வின்ஸ் செய்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி.
அதிகமான கனவுகளுடன் அவர் ராதிகாவை திருமணம் செய்த நிலையில், அவரது விருப்பத்திற்கு மாறாக, ராதிகா அவரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். ராதிகாவிற்கு தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கோபி மீண்டும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து விடுவாரோ என்ற அச்சம், அவரை தொடர்ந்து கோபியுடன் சண்டை போட வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் அவர் போராட வேண்டியிருக்கிறது.
இதன் எதிரொலியாக தொடர்ந்து ராதிகாவுடனான வாழ்க்கை, கோபிக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. தன்னுடைய முந்தைய வாழ்க்கையே தேவலாம் என்ற நினைப்பும் அவருக்கு வருகிறது. ஒரு காபிக்காக அவர் பாடாய் படுவதாகவும் காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. ஒரு கட்டத்தில் கோபியும் ராதிகாவும், பாக்கியாவின் வீட்டிலேயே தங்கும் சூழலும் ஏற்படுகிறது. அங்கு ஈஸ்வரிக்கும் ராதிகாவிற்கும் தொடர்ந்து சண்டைகள் ஏற்படுகின்றன. இதையடுத்து ராதிகாவை வீட்டைவிட்டு போகும்படி கோபி கூறுவதாகவும் அமைகிறது.
இதனிடையே, இனியாவை பள்ளிக்கு அழைத்து செல்கிறார் கோபி. அப்போது அவர்கள் இருவரும் மனம்விட்டு பேசுகின்றனர். அப்போது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் குடியை நாடுவது எப்படி சரியான தீர்வாக இருக்கும் என்று இனியா கேட்கிறார். தனக்கு மன உளைச்சல் அதிகமாக இருப்பதாக கோபி கூறுகிறார். தொடர்ந்து அவரது மன உளைச்சலுக்கு ராதிகா தானே காரணம் என்றும் இனியா கேட்கிறார்.

இதை ஒப்புக்கொள்ளும் கோபி, தான் அவசரப்பட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டதாக கூறுகிறார். இதையடுத்து, ராதிகாவை விட்டுவிடும்படியும் தாங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கலாம் என்றும் இனியா கூறுகிறார். இதையடுதது அது தப்பில்லையா என்று கோபி கேட்கிறார். தொடர்ந்து பாக்கியா குறித்த பேச்சு வரும்போது, விவாகரத்திற்கு பிறகு பாக்கியா சந்தோஷமாக இருப்பதாக கோபி கூறுகிறார்.
இதையும் கேள்வி கேட்கிறார் இனியா. கோபியை விவாகரத்து செய்தவுடன்தான் தன்னுடைய அம்மா மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், கோபி அந்த அளவிற்கு டார்ச்சர் செய்தாரா என்றும் இனியா கேட்கிறார். தன்னுடைய பாட்டி ஈஸ்வரியையும் பாக்கியா சிறப்பாக சமாளித்து வருவதாகவும் இனியா கூற, இதனால், கோபியின் முகம் மாறுகிறது. பெரியவர்களின் வாழ்க்கையை குறித்து இனியா கவலை கொள்ளாமல் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தும்படியும் அவர் அட்வைஸ் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











