Baakiyalakshmi :தலையில் அடித்துக் கொண்டு அழும் ஈஸ்வரி.. ராதிகாவை தலைமுழுகச் சொல்லும் அப்பா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ராதிகாவிற்கும் ஈஸ்வரிக்கும் ஏற்படும் சண்டை முற்றி, ராதிகாவை கழுத்தைப்பிடித்து வீட்டை விட்டு ஈஸ்வரி துரத்தும் அளவிற்கு செல்கிறது.

இதையடுத்து ராதிகாவின் அம்மா, போலீசை வரவழைக்க, அவமானத்தில் குடும்பத்தினர் அனைவரும் கோபியை தொடர்ந்து திட்டுகின்றனர். வழக்கம் போல பாக்கியா அமைதி காக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo and episodes makes fans more thrilling

முற்றும் ஈஸ்வரி -ராதிகா சண்டை :விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது. டிஆர்பியிலும் சேனலின் முதலிடத்தில் இந்தத் தொடர் உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்தத் தொடரை மேலும் பொலிவாக்க இயக்குநர் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து முதலில் ராதிகாவும் அடுத்ததாக கோபியும் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், அவையனைத்தும் பொய்யானது.

தற்போது இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாக்கியா வீட்டிலேயே கோபி, ராதிகா மற்றும் அவரது மகள் மயூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் கோபியை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஈஸ்வரிக்கு எதிராக, பாக்கியா வாய் திறந்து பேசவே மாட்டார். ஆனால் ஈஸ்வரிக்கு எதிராக அடுத்தடுத்து வாய் கொடுத்து சண்டையை பெரிதாக்குகிறார் ராதிகா.

அதுபோல இனியா, மயூவை பள்ளிக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தகராறை ராதிகாவும் ஈஸ்வரியும் சேர்ந்து பெரிதாக்குகின்றனர். ராதிகா குடிக்கும் காபி கப்பை ஈஸ்வரி தட்டி, விட, அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் வெளியேறுமாறு ராதிகா பதில் பேசுகிறார். தொடர்ந்து அவரை தள்ளிவிட, அவர் கீழே விழுந்த காபியில் வழுக்குகிறார். இதையடுத்து எழும் சண்டையில், ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார் ஈஸ்வரி.

இதையடுத்து அந்த வீட்டிற்கு போலீசை அழைத்து வருகிறார் ராதிகாவின் அம்மா. இந்நிலையில், அவர்கள், கோபியின் மனைவி ராதிகாவை யாரும் வெளியில் போகச் சொல்ல உரிமை இல்லை என்றும், அவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ் அந்த வீட்டிற்கு வந்து குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்யும் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் போலீஸ் துணையுடன் கம்பீரமாக வீட்டிற்குள் செல்கிறார் ராதிகா.

Vijay TVs Baakiyalakshmi serial new promo and episodes makes fans more thrilling

இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் கோபியிடம் கோபத்துடன் பேசுகின்றனர். கோபிக்கு எப்போதும் ஆதரவுடன் இருக்கும் ஈஸ்வரியும், தன்னை தொடக்கூடாது என்று கத்துகிறார். போலீஸ் வந்து குடும்ப கௌரவத்தை குலைத்ததாக ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கொதிக்கின்றனர். இதையடுத்து ராதிகாவை திருமணம் செய்ததால் குடும்பத்தினரின் நிம்மதியுடன் கோபியின் நிம்மதியும் பரிபோனதாக ராமமூர்த்தி கூறுகிறார். இதனால் கோபி தான் தப்பு செய்துவிட்டதாக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறார்.

இதையடுத்து ராதிகாவிடம் கோபமாக பேசி அவரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் கோபி. நடந்ததை முறையாக விசாரிக்காமல் தன்னிடம் கோபம் கொள்ளும் அவரெல்லாம் மனிதரா என்று ராதிகா கேள்வி எழுப்புகிறார். இதனால் அவருக்கு மத்தளம் போன்ற நிலைமைதான் ஏற்படுகிறது. தன்னுடைய அம்மாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் ராதிகாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X