இமெயில் படிக்கத் தெரியுமா.. பாக்கியா கேள்வியால் கடுப்பான ராதிகா.. புள்ள பூச்சிக்கு முளைத்த கொடுக்கு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
கோபி -பாக்யா மற்றும் ராதிகா என முக்கியமான கேரக்டர்களில் சதீஷ், சுசித்ரா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி இந்தத் தொடரில் நடித்து வருகின்றனர்.
காலம் கடந்த காதல் மற்றும் அதை திருமணத்தில் முடிக்க நாயகன் செய்யும் தகிடுதத்தங்களை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் மூன்று கேரக்டர்கள் மற்றும் அதை சுற்றியே கதை நகர்வதால், அதிகமான கேரக்டர்களை கொண்டு கடுப்படிக்காமல் கதை எளிமையாக, சாதாரண ரசிகர்களையும் ஈர்க்கும்வகையில் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அதன் நகர்விற்கான காரணங்கள், நியாயங்கள் காணப்படுகின்றன.

சிக்கலான வாழ்க்கை
வயதுக்கு மீறிய காதல் மற்றும் அதை திருமணத்தில் முடிக்க கோபி என்ற கேரக்டர் மெனக்கெட்டு, பல தகிடுதத்தங்களை செய்து இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்வதாக கதைக்களம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் என்ற ஓவர் கான்பிடன்ஸ் இந்தக் கேரக்டரிடம் காணப்பட்டது. ஆனால் அவர் நினைத்தபடி வாழ்க்கை இனிமையாகாமல், மேலும் சிக்கலாகவே காணப்படுகிறது.

முழிபிதுங்கும் கோபி
முதல் திருமண வாழ்க்கையில், தான் தான் ராஜா என்னும்படியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, தற்போது காலம் போன கடைசியில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு, அதை மெயின்டெயின் செய்வதற்காக இரண்டாவது மனைவியை திருப்தி படுததுவதற்காக போராடுவதாக கோபி கேரக்டர் அமைந்துள்ளது. ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு அவர் முழிபிதுங்குவதை நகைச்சுவை கலந்து கொடுத்துவருகிறார் தொடரின் இயக்குநர். இது ரசிகர்களுக்கு அதிகமான சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது.

அடுத்தக்கட்டத்தில் பாக்யா
அதற்கேற்றாற்போல அந்த கேரக்டரை நடிகர் சதீஷ் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கும் பாக்யா, தன்னுடைய குடும்பத்திற்கான போராட்டத்தை சரியாக கொண்டு செல்கிறார். ஆனால் எவ்வளவுதான் ஆங்கில வகுப்பு, கேன்டீன் கான்டிராக்ட் என அவர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தாலும், சொல்லுங்க அத்த என்று பம்முவது அதிகமான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

மட்டம் தட்டும் ராதிகா
ஆனால் ஒரு குடும்பத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் இத்தகைய பணிவு தேவைதானோ என்று சாதாரண பெண்களுக்கு பாடம் எடுக்கிறார் பாக்யா. இதனிடையே, பாக்யாவின் வளர்ச்சியை பிடிக்காத ராதிகா, அவரை தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீச்சர், டீச்சர் என்று உறவை மேம்படுத்திய ராதிகா, தற்போது பாக்யாவை அதள பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரது கேரக்டர் அழகான வில்லிக்கான அடித்தளத்தை போட்டு வருகிறது.

குறைகூறும் ராதிகா
தற்போது வெளியாகியுள்ள இந்தத் தொடரின் ப்ரமோவில், ராதிகாவின் அலுவலக கேன்டீன் கான்ட்டிராக்டை எடுத்து, அனைவருக்கும் உணவு சப்ளை செய்கிறார் பாக்யா. அங்கு வரும் ராதிகா, உணவு தரம், சுவை சரியில்லை என்று தனக்கு புகார் வந்ததாக வம்பிழுக்கிறார். தொடர்ந்து அங்கு சாப்பிடுபவர்களில் ஒருவர் உணவு சரியில்லை என்று கூறினாலும் ராதிகாவின் புகாரை தான் ஏற்பதாக பாக்யா சவால் விடுகிறார்.

இமெயில் செக் செய்ய தெரியுமா?
அதற்கு ஏற்றாற்போலவே, அங்கிருப்பவர்கள் எல்லாம் உணவு சிறப்பாக உள்ளதாக சர்ட்டிபிகேட் கொடுக்கின்றனர். இதையடுத்து, ராதிகாவிற்கு வந்த இமெயிலும் உணவு சிறப்பாக இருப்பதாகவே வந்திருக்கும் என்றும் ராதிகா அதை மறுபடியும் செக் செய்ய வேண்டும் என்றும் கூறும் பாக்யா, ராதிகாவிற்கு இமெயில் செக் செய்யத் தெரியுமா என்று பதிலுக்கு வம்பிழுக்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா அங்கிருந்து நகர்கிறார். இவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள இந்தத் தொடரின் ப்ரமோவில் காணப்படுகிறது.

வளர்ச்சிக்கு காரணமாகும் ராதிகா
தன்னுடைய கணவன், குடும்பம் என சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவரும் பாக்யாவின் உலகம் தலைகீழாக மாறியுள்ளது. யாரையும் அதிர்ந்தும் பேசாத பாக்யா, படித்த ஸ்டைலான ராதிகாவை பார்த்து இமெயில் செக் செய்யத் தெரியுமா என்று அதிரடியாக கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். ராதிகா அசிங்கப்படுத்தியதாலேயே ஆங்கில வகுப்பிற்கும் செல்கிறார். இவ்வாறு பாக்யாவை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டே, அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறார் ராதிகா.


Click it and Unblock the Notifications











