Baakiyalakshmi :குடிபோதையில் நடுரோட்டில் வீழ்ந்துகிடக்கும் கோபி.. மீட்டு கொண்டுவரும் ஈஸ்வரி!
சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் முன்னணியில் உள்ளது பாக்கியலட்சுமி. சேனலின் டிஆர்பியில் முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளது.
தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாககவர்ந்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா என முன்னணி கேரக்டர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளை இந்தத் தொடர் காட்சிப் படுத்தி வருகிறது.
தற்போது கோபி மற்றும் ராதிகாவிடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுவரும் சூழலில், ராதிகா தன்னுடைய மகள் மயூவையும் பாக்கியா வீட்டிற்கே அழைத்து வருகிறார்.

குடிபோதையில் தத்தளிக்கும் கோபி :
கோபி, ராதிகா, பாக்கியா என முக்கியமான கேரக்டர்களை மையமாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் சேனலின் முன்னணி தொடராக டிஆர்பியிலும் முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர் காணப்படுகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரின் மூன்று முக்கியமான கேரக்டர்களும் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அதற்கான நியாயம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பெற முயற்சி செய்யும் கோபிக்கு, ஒரு கட்டத்தில் உண்மை அறிந்து தானே முன்வந்து விவாகரத்தை கொடுக்கிறார் பாக்கியா. இதன்மூலம் அவர் 25 ஆண்டுகளாக இல்லாத சுதந்திரத்தை உணர்வதாக காட்டப்படுகிறது. தன்னுடைய குடும்பம் என்னும் கூட்டையும் விட்டுக் கொடுக்காமல், தன்னை தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் பாக்கியா, அனைவருக்கும் உதாரணமாக காணப்படுகிறார்.
தொடர்ந்து அவர், குடும்பத்தினரிடையே பவ்யம் காட்டினாலும் அவர் தன்னை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது சிறப்பாக உள்ளது. சில நேரங்களில் அவரது அடக்கஒடுக்கம் ரசிகர்களை கடுப்பேற்றவும் தவறவில்லை. இதனிடையே, மறுமணம் செய்துக் கொண்டாலும், வாழ்க்கையில் இருந்த பழைய சந்தோஷம் தொலைந்ததில் குடிக்கு அடிமையாகிறார் கோபி. அதற்கு காரணமாக ராதிகா காட்டப்படுகிறார். அவர் தொடர்ந்து பாக்கியா குடும்பத்தினர் கொடுக்கும் டார்ச்சரில், கோபியை குடைந்து வருகிறார்.

அலுவலகத்தில் ராதிகா தனக்கு கொடுக்கும் தொல்லையை குடும்பத்தினரிடையே வெளிப்படுத்துகிறார் பாக்கியா. இதனால் ராதிகாவை ஈஸ்வரி, கோபமாக பேசி அவமானப்படுத்துகிறார். இதுகுறித்து அவர் கோபியில் புகார் செய்ய, அவர், ராதிகாவிற்கு சப்போர்ட் செய்யாமல், அவரை வீட்டை விட்டு போகும்படி கூறி கடுப்பேற்றுகிறார். ராதிகாவும் கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார்.
இதனிடையே, அதிகமாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் கோபி, எழிலுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறுகிறார். ஆனால் அவரோ, மறுத்துவிடுகிறார். இதைக் கேட்கும் கோபியின் அம்மா, செழியன் உதவியுடன் அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு வருகிறார். வழியில் அவர் அம்மா செனடிமெண்ட் பாடல்களை பாடி காமெடி செய்வதாக எபிசோட் காணப்படுகிறது. இதனிடையே, ராதிகாவும் தன்னுடைய அம்மாவின் அட்வைசை எடுத்துக் கொண்டு, தன்னுடைய மகள் மயூவை பாக்கியா குடும்பத்திற்குள் கொண்டு வருவதாக ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











