என்னது பாக்கியாவோட பொண்ணா.. பழனிச்சாமி இது உங்களுக்கு ஓவரா தெரியலை?
சென்னை : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் மூன்று கேரக்டர்கள் முக்கியத்துவம் பெற்று கதைக்களம் அமைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது பழனிச்சாமி என்ற லீட் கேரக்டரை பாக்கியலட்சுமி சீரியலில் இயக்குநர் அறிமுகம் செய்துள்ளார். அவர் தோழமையுடன் பாக்கியாவிடம் பழகி வருகிறார்.
என்னதான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தாலும் பழனிச்சாமியுடன் அவர் சிரித்து சிரித்து பேசுவதை கோபியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடர் அந்த சேனலின் டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. கோபி -பாக்யா மற்றும் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா என மூன்று லீட் கேரக்டர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களில் விளையாடி வருகிறார் சீரியலின் இயக்குநர். இவர்களின் ஆட்டமே தனித்துவமாக இருக்கும் நிலையில் என்ன நினைத்தாரோ தற்போது பழனிச்சாமி என்ற கேரக்டரை புதிதாக இணைத்துள்ளார்.

பழனிச்சாமி கேரக்டர்
இந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார். கோபி தன்னுடைய காதல் மற்றும் அதையொட்டிய திருமணத்திற்காக, பாக்யாவை ஏமாற்றி விவாகரத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மையை உணரும் ராதிகா, தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தையும் அவரே கொடுக்கிறார். தொடர்ந்து கோபி வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகிறார். இந்நிலையில் தான் கட்டிய வீட்டை விட்டு வெளியேற சொல்லும் கணவனின் பணத்தை திரும்பத் தருவதாக சவால்விட்டு அதையும் சிறிது சிறிதாக நிறைவேற்றுகிறார்.

வளர்ச்சிப்பாதையில் பாக்யா
கேன்டீன் கான்டிராக்ட் உள்ளிட்டவற்றால் தன்னுடைய கணவன் கேட்ட பணத்தில் ஒரு பங்கை கொடுத்து அதிரடி கிளப்புகிறார் பாக்யா. இது எப்படி சாத்தியம் என்று குழம்பும் கோபி, தடுமாறி குடிக்கப்போக, அதனால் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் சண்டை -சச்சரவு என்று கதைக்களம் அமைந்துள்ளது. மேலும் இனியா -ராதிகாவிற்கும் மோதல் ஏற்பட, யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குகிறார் கோபி.

ஆதரவாக செயல்படும் பழனிச்சாமி
இந்நிலையில் பழனிச்சாமி, பாக்யாவிற்கு ஆதரவான செயல்பாட்டை மேற்கொள்கிறார். அவரது லுக்கை எப்போதும் புகழும் பழனிச்சாமி, அவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த சவால்களையும் பாராட்டுகிறார். இந்நிலையில் ராதிகாவின் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க சுடிதார் அணிகிறார் பாக்யா. இந்த கெட்டப்புடன் அவர் ஆங்கில வகுப்பிற்கு செல்ல, அவரை பார்க்கும் பழனிச்சாமி, என்ன பாக்யாவின் மகள்தான் வந்துவிட்டாரோ என்று தான் நினைத்ததாக கூறுகிறார்.

அன்பு பாராட்டும் பழனிச்சாமி
இதற்கு அவர் கூறும் விளக்கம் அன்பு பாராட்டுதல். இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. எப்போதும்போல அவரது பாராட்டிற்கு பாக்யா வெட்கப்படுவதாக அந்த ப்ரமோவில் காணப்படுகிறது. என்னதான் முகஸ்துதிக்காக ஒருவரை பாராட்டினாலும், பாட்டி வயதில் உள்ள ஒருவரை இப்படி புகழ்வதெல்லாம் பெரிய உருட்டால்ல இருக்கு என்று ரசிகர்கள் இந்தப் ப்ரமோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தத் தொடரில் பழனிச்சாமியின் கேரக்டர் குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம். அவர் பாக்யாவை திருமணம் செய்வாரா அல்லது அவருக்கு ஆதரவான செயல்பாட்டுடன் நிறுத்திக் கொள்வாரா என்று அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications