கோபியை உதைத்து தள்ளிய மயூ.. எட்டிப் போய் விழுந்த கோபி.. இன்னா அடி!

சென்னை : விஜய் டிவியின் முக்கிய மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக மாறியுள்ள பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி சிறப்பான எபிசோட்களால் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. பாக்கியாவுடன் கோபி விவாகரத்து, ராதிகாவுடன் திருமணம், தொடர்ந்து கோபியின் திண்டாட்டம் என தொடர் களைகட்டி வருகிறது.

ராதிகாவை திருமணம் செய்தால் தன்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்ற கோபியின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. தான் தப்பு செய்துவிட்டோமோ என அவர் நினைக்கும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்களை தந்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. திருமணமான மகனை வைத்துக் கொண்டு, தன்னுடைய பழைய காதலை புதுப்பித்துக் கொண்ட கோபி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டார்.

ராதிகாவுடன் திருமணம்

ராதிகாவுடன் திருமணம்

அழகான படித்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய கோபி, அதற்கு கூறிய காரணம் தன்னுடைய மனைவி பாக்கியா தனக்கு ஏற்றவராக இல்லை என்பதே. 25 ஆண்டுகளாக அவருடன் மனமொத்து வாழவில்லை என்றும் கூறியே, அவர் ராதிகாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

 மகா சங்கமம்

மகா சங்கமம்

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே அவர் ராதிகாவை திருமணம் செய்த நிலையில் கொடைக்கானலுக்கு ஹனிமூனை கொண்டாட சென்ற நிலையில் மகா சங்கமத்தில் அங்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், அவரது திருமணத்தை அறிந்து அவரை வைத்து செய்தனர். இதனால் ராதிகாவின் கோபத்திற்கும் ஆளானார் கோபி.

புதிய வீட்டில் குடியேறிய கோபி

புதிய வீட்டில் குடியேறிய கோபி

இந்த சர்ச்சைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவர், தன்னுடைய வீட்டின் அருகிலேயே ராதிகா மற்றும் மயூவுடன் புதிய வீட்டில் குடியேறினார். ஒரு பக்கம் ராதிகா டயட் என்ற பெயரில் ஓட்ஸ் கஞ்சியை கொடுக்க வாழ்க்கையே வெறுத்துப் போகிறது. இதனிடையே இன்றைய புதிய ப்ரமோவில் மயூ, கோபியை உதைத்து தள்ளி சம்பவம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை அளித்துள்ளது.

ராதிகாவுடன் ரொமான்ஸ்

ராதிகாவுடன் ரொமான்ஸ்

மயூ தூங்கிவிட்டதாக ராதிகா சொல்ல, ரொமான்ஸ் மூடுடன் தான் செய்துக் கொண்டிருந்த வேலையையும் தள்ளி வைத்துவிட்டு பெட்ரூமிற்கு செல்கிறார் கோபி, ஆனால் அதற்குள் ராதிகாவும் தூங்கிவிட, புதிதாக கல்யாணம் ஆனநிலையில் எந்தவிதமான ரொமான்சும் இல்லையே என்று கடுப்பாகிறார் கோபி.

கோபியை உதைத்து தள்ளிய மயூ

கோபியை உதைத்து தள்ளிய மயூ

அட்லீஸ்ட் ராதிகாவின் அருகிலாவது தூங்கலாம் என்று மயூவை தள்ளிப் படுக்கும்படி கூற, அவரோ, தூக்கத்தில் கோபியை உதைத்து தள்ளுகிறார். இதனால் எட்டிப் போய் விழுகிறார் கோபி. ஆனால் இதையெல்லாம் அறியாமல் ராதிகா, தூக்கத்தில் தன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் மேலும் கடுப்பாகிறார் கோபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X