Don't Miss!
- News
என்ன ராமலிங்கம் எப்படி இருக்க? கொரோனா பரோல் முடிந்து சிறை திரும்பாத கைதிகள்! சாட்டையை சுற்றிய போலீஸ்
- Finance
எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?
- Lifestyle
பெண்களே! உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினை வருமாம்...!
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
என்னது ப்யூட்டி பார்லருக்கு 16 ஆயிரம் ரூபாய் செலவா.. முழி பிதுங்கும் கோபி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் கோபி -ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இவர்கள் மூவரை கொண்டு சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர்.
ஸ்டைலாக மாறிய பாக்கியா.. கடுப்பான ராதிகா.. பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த தொடரில் முதலிடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் ரசிகர்கள் அதிகமாக கவரப்பட்டு ஏராளமானோர் இந்தத் தொடரை கண்டு களித்து வருகின்றனர்.

ராதிகாவை திருமணம் செய்த கோபி
கோபி -பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்தத் தொடரில் ராமமூர்த்தி, எழில், ஜெனி என சிறிய சிறிய கேரக்டர்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கே குழந்தைப் பிறக்கவுள்ள நிலையில், கோபி இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துள்ளது அதிகப்படியான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கோபி சந்திக்கும் பிரச்சினைகள்
இதனிடையே, ராதிகாவை திருமணம் செய்தால் அதிகப்படியான சந்தோஷத்துடன் வாழலாம் என்ற கோபியின் கனவு எவ்வாறு நிராசையாக மாறுகிறது மற்றும் திருமணத்திற்கு பின்பு அவர் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள்
கோபி வீட்டிற்கு அவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் மகள் இனியா ஆகியோர் வருவது, எழிலின் காதல், ஜெனியின் கர்ப்பம், வளைகாப்பில் பங்கேற்கும் கோபி, வளைகாப்பிற்கு கோபி வருவதால் அவமானப்படும் குடும்பத்தினர், கல்யாணம் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தால் ஏமாற்றமடையும் ராதிகா, தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்தவும் குடும்பத்தை பராமரிக்கவும் மெனக்கெடும் பாக்கியா என அடுத்தடுதத சுவாரஸ்யங்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

பார்லருக்கு செல்லும் பாக்கியா -ராதிகா
இதனிடையே, ப்யூட்டி பார்லருக்கு செல்லும் ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் சந்தித்து கொள்வதாக காட்சிகள் வெளியாகின. ப்யூட்டி பார்லருக்கு செல்லும் ராதிகா ஏன் திருமணம் செய்துக் கொண்டேன் என்று யோசிப்பதாகவும் அந்த அளவிற்கு பிரச்சினைகள் தன்னை சூழ்ந்துள்ளதாகவும் பார்லர் பணிப்பெண்ணிடம் புலம்புகிறார்.

பார்லருக்கு ரூ 16 ஆயிரம்
இதனிடையே, இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில், தன்னுடைய டெபிட் கார்டிலிருந்து 16 ஆயிரம் ரூபாய் ஸ்வைப் செய்யப்பட்டுள்ளதாகவும் எப்படி போனது என்று தெரியவில்லை என்றும் ராதிகாவிடம் புலம்புகிறார் கோபி, அவர் அல்லோல கல்லோலப்படும் நிலையில், நிதானமாக தான்தான் அந்தப் பணத்தை எடுத்தேன் என்று கூறுகிறார் ராதிகா.

செலவு செய்த ராதிகா
இதை தொடர்ந்து அவர் எதற்காக அந்தப் பணத்தை எடுத்தார் என்று பரிதவிப்புடன் கேட்கிறார் கோபி. தொடர்ந்து ப்யூட்டி பார்லருக்கு சென்றதாகவும் அங்குதான் அந்தப் பணத்தை செலவழித்ததாகவும் கூறுகிறார் ராதிகா. தான் ஒரு மாதமாக பார்லருக்கு செல்லவில்லை என்றும் அதனால்தான் இந்த பணத்தை செலவழித்ததாகவும் தெரிவிக்கிறார்.

முழி பிதுங்கும் கோபி
இதையடுத்து என்னது ப்யூட்டி பார்லருக்கு 16 ஆயிரம் ரூபாயா என்று முழி பிதுங்குகிறார் கோபி. இவ்வாறு இன்றைய ப்ரமோ காணப்படுகிறது. கோபியின் இரண்டாவது திருமணம் எப்படியெல்லாம் அவரை படுத்துகிறது என்பதை அடுத்தடுத்த எபிசோட்கள் காட்டுகின்றன. பணத்தேவை அதிகமாக இருப்பதால் அடுத்த பிசினசை செய்யவும் அவர் யோசிப்பதாக கடந்த வாரங்களில் எபிசோட்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.