Suchitra :பாக்கியாவின் மாடர்ன் லுக்.. வாவ் சொன்ன ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவாக அதிரடி கிளப்பி வருபவர் நடிகை சுசித்ரா.

சுசித்ராவின் அமைதியான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இந்தத் தொடருக்கு வலிமை சேர்த்து வருகிறது.

தன்னுடைய கணவன் தன்னை விவாகரத்து செய்த நிலையில், அவரது குடும்பத்தினரையும் சேர்த்து கவனிக்கும் பெண்ணின் கேரக்டராக பாக்கியலட்சுமி கேரக்டர் காணப்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial Suchitra shares her new photos in modern look

பாக்கியாவின் மாடர்ன் லுக் : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர் காணப்படுகிறது. தன்னுடைய கணவன், மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், தான் தனியாக இருந்து தன்னுடைய குடும்பத்தை மட்டுமில்லாமல் தன்னுடைய கணவனின் பெற்றோரையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும் கேரக்டரை மையமாக வைத்து இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்தக் கேரக்டரில் நடிகை சுசித்ரா, மிகவும் இயல்பாக நடித்து வருகிறார். அத்தை, மாமா என்று அவர் உருகுவதிலாகட்டும், தன்னுடைய குழந்தைகளிடம் அவர் காட்டும் அக்கறையிலாகட்டும், தொழிலில் காட்டும் அடுததடுத்த திறமையிலாகட்டும், ராதிகாவின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அவர் செய்யும் உபாயங்களிலாகட்டும் அனைத்திலும் சுசித்ராவின் நடிப்பு மிகவும் இயல்பாக பொருந்துகிறது.

இந்த தொடரில் அமைதியே உருவாக பாக்கியா கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்து வருகிறார். இந்தக் கேரக்டர் சிறப்பாக அமைய சுசித்ராவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். தன்னுடைய கணவன், ராதிகா உள்ளிட்டவர்கள் தன்னை எந்தவகையில் கடுப்பேற்றினாலும் அதுகுறித்தெல்லாம் எதுவும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், தன்னுடைய வேலை உள்ளிட்டவற்றில் கருமமே கண்ணாகா இருப்பதாக இந்தக் கேரக்டர் அமைந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial Suchitra shares her new photos in modern look

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சுசித்ரா. தொடர்ந்து பல ரீல்ஸ் வீடியோக்களையும், மற்ற நடிகர்கள்,நடிகைகளுடன் இணைந்து டான்ஸ் செய்யும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மிகவும் மாடர்னான லுக்கில் அவர் தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சீரியலில் மிகவும் அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்துவரும் சுசித்ரா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கணக்கா, தனிப்பட்ட முறையில் மிகவும் மாடர்னாக காணப்படுகிறார். தொடர்ந்து சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிப்பவருடன் இணைந்து பல டான்ஸ் வீடியோக்களையும் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதையடுத்து சுசித்ராவை 1.2 லட்சம் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X