Don't Miss!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
சீரியலில் அடித்துக் கொள்ளும் பாக்கியா -ராதிகா.. நேரில் என்ன செஞ்சாங்க தெரியுமா?
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா என லீட் கேரக்டரில் நடித்துவரும் நடிகர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தான் வாங்கிய வீட்டை திரும்ப பெறும் முடிவில் கோபி உறுதியாக உள்ளார். இதுகுறித்த அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ந்து ரசிகர்களை ஷாக்கில் வைத்துள்ளது.
ஸ்டைலாக மாறிய பாக்கியா.. கடுப்பான ராதிகா.. பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக பாக்கியலட்சுமி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சிறப்பான காட்சிகளுடன் இந்தத் தொடரை எடுத்து வருகிறார் சீரியலின் இயக்குநர்.

பரபரப்பான எபிசோட்கள்
கோபி -பாக்கியா மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ள கோபி, அடுத்தடுத்த பரபரப்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது எழிலின் செயல்பாட்டால் கோபமடைந்துள்ள கோபி, தன்னுடைய வீட்டை திரும்ப கொடுக்க காலக்கெடு விதித்துள்ளார்.

கோபி மீது எழில் கோபம்
முன்னதாக தன்னுடைய மருமகன் ஜெனியின் வளைகாப்பில் ராதிகாவுடன் சென்று பங்கேற்ற கோபி, குடும்பத்தினரில் வயிற்றெரிச்சலை சம்பாதித்தார். அவருடைய அம்மா, அப்பா மற்றும் பாக்கியா என அனைவரும் மற்றவர்களின் ஏளனத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்தே எழில் தன்னுடைய அப்பா மீது கோபமடைந்தார்.

கோபியிடம் சண்டை
இதையடுத்து தன்னுடைய கதைகளை விற்று கோபியிடம் இருந்து வீட்டை பெறும் முயற்சியிலும் எழில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது தாத்தா, கோபியிடம் சண்டை பிடிக்கும் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. தாத்தாவின் பேச்சையடுத்து இனியாவும் இந்த ப்ரமோவில் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

பாக்கியா -ராதிகா வீடியோ
இதனிடையே இந்த சீரியலில் எதிரும் புதிருமாக உள்ள பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் சூப்பரான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இந்த வீடியோவில் பயங்கரமாக லூட்டி அடிக்கின்றனர். எப்போதும் ரேஷ்மா மற்றும் சுசித்ரா இருவரும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.