ராதிகா வில்லத்தனம் பண்ணுவாங்கன்னு பார்த்தா.. கோபி பண்றாரே.. டென்ஷனான பாக்கியா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

பாக்கியாவை விவாகரத்து செய்த கையோடு ராதிகாவின் மனதை மாற்றி ஒரு சில தினங்களிலேயே திருமணம் செய்துக் கொண்டார் கோபி.

இதனிடைய கடந்த சிலதினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோஸ் நிகழ்ச்சியுடன் மகா சங்கமத்திலும் இந்தத் தொடர் சேர்ந்தது.

விஜய் டிவியின் தொடர்கள்

விஜய் டிவியின் தொடர்கள்

விஜய் டிவியில் ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டிவரும் நிலையில், மற்றொரு பக்கம் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா என அடுத்தடுத்த தொடர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் மகா சங்கமத்தை நடத்தி முடித்துள்ளன.

பாக்கியாவை கொண்டாடும் குடும்பத்தினர்

பாக்கியாவை கொண்டாடும் குடும்பத்தினர்

முன்னதாக பாக்கியாவுடன் விவாகரத்து நடந்த நிலையில், உடனடியாக ராதிகாவை கன்வின்ஸ் செய்து கோபி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தை நிறுத்த பாக்கியா குடும்பத்தினர் மேற்கொண்ட எந்த முயற்சியில் பலனை அளிக்கவில்லை. இதனிடையே மகனை வெறுத்து ஒதுக்கிய ஈஸ்வரி, தன்னுடைய மருமகளை தாங்க ஆரம்பித்துள்ளார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் பாக்கியாவை கொண்டாடத் துவங்கியுள்ளனர்.

ஆட்டம் கண்ட கோபியின் திட்டம்

ஆட்டம் கண்ட கோபியின் திட்டம்

இதனிடையே தான் நினைத்தபடி படித்த அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு சிறப்பாக வாழலாம் என்ற கோபியின் கனவு, கொடைக்கானலிலேயே ஆட்டம் கண்டது. ராதிகாவுடனான தன்னுடைய திருமணத்தை தன்னுடைய நண்பனிடம் கூற முடியாமல் அவர் முழித்தது, பல சங்கடங்களை ஏற்படுத்தியது.

தனிமூனாக மாறிய ஹனிமூன்

தனிமூனாக மாறிய ஹனிமூன்

ஒரு பக்கம் கொடைக்கானல் வந்த மூர்த்தி குடும்பத்தினர் கோபியையும் ராதிகாவையும் வைத்து செய்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய புது மனைவி ராதிகாவைவே அடிக்க கைத்தூக்கும் நிலைக்கு கோபி தள்ளப்பட்டார். ஹனிமூன் அவருக்கு தனிமூனாவே அமைந்தது.

காபிக்கு பதிலாக டீ

காபிக்கு பதிலாக டீ

இதனிடையே ஹனிமூன் களேபரங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய கோபி, ஒரு காபிக்கு கூட கதியில்லாமல், தன்னுடைய மனைவி பாக்கியாவை நினைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் சம்பாதிக்கும் ஒரே மனிதர் என்பதால் பாக்கியா அவரை தாங்கு தாங்கென்று தாங்குவார். ஆனால் காபி கேட்டால், அனைவரும் குடிக்கும் டீயையே கோபிக்கு தருகிறார்கள் ராதிகா குடும்பத்தினர்.

கடுப்பேற்றும் கோபி

கடுப்பேற்றும் கோபி

வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்லையா என்று அங்கலாய்க்கிறார் கோபி. இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய வீட்டின் எதிரிலேயே ராதிகாவுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார். அவரின் இந்த செயல் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் கடுப்பேற்றுகிறது.

கோபி வில்லத்தனம்

கோபி வில்லத்தனம்

குடும்ப மானத்தை வாங்கவே கோபி இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக அவரது அப்பா முதல்கொண்டு அனைவரும் குதிக்கின்றனர். ஆனால் தன்னுடைய புது மனைவியுடன் புதிய வீட்டில் ஜம்மென்று குடியேறியுள்ளார் கோபி. தொடர்ந்து அவரது வில்லத்தனத்தை பாக்கியா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதாக அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X