இனி உருட்டு செல்லாது கோபி.. பொங்கியெழுந்த ராதிகா.. அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்கியலட்சுமி தொடர்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கிய மற்றும் ராதிகாவை சுற்றியே தொடர் செல்கிறது.

தன்னுடைய காதலுக்காக தன்னுடைய குடும்பத்தினரை விட நினைக்கும் கோபி கதாபாத்திரம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கோபி யாருடைய கணவர் என்ற உண்மை தெரிந்து அவரை கோபத்துடன் எதிர்கொள்கிறார் ராதிகா.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கும் கொடுத்து வருகிறது. இந்த சேனலின் டிஆர்பி தொடர்ந்து உயர வேண்டிய அளவில் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அடுத்தடுத்த தொடர்கள், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற முந்தைய தொடர்களின் சீசன்கள் என்று வித்தியாசமாக யோசித்து ஒளிபரப்பி வருகிறது.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

விஜய் டிவியின் பல சீரியல்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பல திருப்பங்களுடன் இந்த தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்களை தொடர்ந்து தன்னுடைய சேனலை பார்க்கும்வகையில் மேலும் எப்படி திருப்பங்களை கொண்டுவரலாம் என்றும் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.

Recommended Video

Bakyalakshmi சீரியலில் அடுத்து நடக்க போகும் Twist இது தான் #TV |Filmibeat Tamil
 பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கடந்த சில வாரங்களாகவே சேனலின் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இதனிடையே, பலப்பல திருப்பங்களுடன் இந்தத் தொடர் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ராதிகாவுடனான காதல் காரணமாக தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறார் கோபி.

வெளிப்பட்ட கோபியின் குட்டு

வெளிப்பட்ட கோபியின் குட்டு

ஆனால் பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமத்தில் கோபியின் குட்டு வெளிப்பட்டது. மூர்த்தி மற்றும் தனம் அவரது காதல் விஷயத்தை தெரிந்துக் கொண்டு, அதை ராதிகாவிடம் கூறி விடுகின்றனர். அதை தொடர்ந்து அவர் கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று நச்சரிக்கிறார்.

 ராதிகாவிடம் உளறிய கோபி

ராதிகாவிடம் உளறிய கோபி

இதையடுத்து தன்னுடைய குடும்பம் மற்றும் மனைவி குறித்து குடிபோதையில் ராதிகாவிடம் உளறி விடுகிறார் ராதிகா. முதலில் மனம் உடையும் ராதிகா, தொடர்ந்து ஆத்திரப்படுகிறார். தான் உளறியது அறியாமல் ராதிகா வீட்டிற்கு வரும் கோபியிடம் அவர் கொந்தளிக்கிறார். இதையடுத்து செய்வதறியாது தவிக்கிறார் கோபி.

 கோபப்படும் ராதிகா

கோபப்படும் ராதிகா

தன்னை தொட வேண்டாம் என்று அவரிடம் கோபப்படுகிறார் ராதிகா. தான் தனியாக வாழத் தெரியாதவள் இல்லை என்றும் கூறுகிறார். தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் டீச்சரின் கணவர் என்பதை மறைத்து தன்னிடம் பேசுவது அசிங்கமாக இல்லையா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

இதுகுறித்த புதிய ப்ரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சண்டையை அடுத்து ராதிகாவின் மகள், அழுகிறார். இந்தப் ப்ரமோவின் எபிசோட்கள் வரும் வாரங்களில் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வருகிறது. கோபி எப்போது மாட்டுவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அது நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X