Bharathi kannamma :திருமண ஏமாற்றுக் கும்பலில் மாட்டும் கண்ணம்மா குடும்பத்தினர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா 2 தொடர்.

இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கண்ணம்மாவின் அக்கா சாந்தியின் திருமண ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

தொடரில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்தில் சிக்கி, வெண்பாவின் முகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vijay TVs Bharathi kannamma 2 serial new promo and episodes makes fans more shoking

திருமண ஏமாற்று கோஷ்டியிடம் சிக்கும் கண்ணம்மா குடும்பத்தினர் : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா தொடர் மாறியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடரில் முதல் சீசன் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே அடுத்த சீசனும் துவங்கியுள்ளது. இதில் பாரதியாக நடித்த அருணுக்கு பதிலாக சிபு சூர்யன் இணைந்துள்ள நிலையில், கண்ணம்மாவாக வினுஷாவே நடித்து வருகிறார். சவுந்தர்யா, வெண்பா கேரக்டர்களும் இந்தத் தொடரில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

கதையில் சித்ரா என்ற கேரக்டரில் வினுஷா நடித்துவருகிறார். அவர் சிறையில் தண்டனை பெற்று வெளியில் வர, கண்ணம்மாவை சந்திக்கிறார். இருவரும் ஒரு கட்டத்தில் தோழிகளாக மாற, கண்ணம்மாவை தாக்க வரும் வில்லன்கள், மாறி, கண்ணம்மாவை கொலை செய்கின்றனர். இதையடுத்து அவரது குடும்பத்தை காப்பதற்காக கண்ணம்மாவின் கிராமத்திற்கு கண்ணம்மாவாக வருகிறார் சித்ரா. அங்கு அவருக்கு என்று சிறப்பான ஒரு குடும்பம் அமைகிறது.

ஆரம்பத்தில் மோதலில் துவங்கும் பாரதி உடனான நட்பு, தற்போது காதலாகியுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெண்பாவின் அம்மா அரங்கேற்றிய தீ விபத்தில் சிக்கிக் கொள்கிறார் சவுந்தர்யா மற்றும் அவரது அண்ணன். இவர்கள் இருவரையும் காப்பாற்ற தைரியமாக உள்ளே செல்லும் வெண்பா, அவர்களை காப்பாற்றிவிட்டு, தான் தீயில் சிக்கிக் கொள்கிறார். இதையடுத்து தீக்காயங்களுடன் மீட்கப்படும் வெண்பா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடந்த சதி எதையும் அறியாத குடும்பத்தினர் வெண்பாவை, கடவுளாக பார்க்கின்றனர். வெண்பாவிற்காக எதையும் செய்யத் தயாராக உள்ளதாக பாரதி கங்கணம் கட்டுகிறார். அவரது முகத்தில் பழையபடி கொண்டுவர பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்தத் தொகையை கட்ட பாரதி முன்வருகிறார். வெண்பாவிற்கு தேவைப்பட்டால் வெளிநாட்டில்கூட சிகிச்சைக் கொடுக்கத் தான் தயாராக உள்ளதாகவும் கூறுகிறார்.

Vijay TVs Bharathi kannamma 2 serial new promo and episodes makes fans more shoking

இதனிடையே ஒருபுறம் கண்ணம்மாவின் அக்கா சாந்தியின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கண்ணம்மா கோயிலில் வேலை செய்து மூன்றரை லட்சம் கொண்டு வர, சவுந்தர்யாவும் தன்னுடைய பங்கிற்கு பணம் கொடுத்து உதவுகிறார். இதனிடையே, சொன்னபடி 30 சவரன் நகையை திருமண நாளின்போது கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறுகின்றனர்.

இதனிடையே, அவர்கள் திருமண ஏமாற்று கும்பல் என்பது தெரியவருகிறது. சாந்தியை திருமணம் செய்துக் கொண்டு, நகை, பணம் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு, சாந்தியுடன் சாந்தி முகூர்த்தம், தேனிலவு முதலியவற்றை முடித்துவிட்டு எஸ்கேப் ஆக வேண்டும் என்று அவர்கள் முடிவெடுப்பதாக தற்போதைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சிக்கலில் சிக்காமல் சாந்தி எப்படி தப்பிப்பார் என்று ரசிகர்கள் தற்போது தங்களது தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X