அப்பாவை நியாபகப்படுத்திய கண்ணம்மா.. கண்கலங்கிய பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தற்போது இரண்டாவது சீசனை துவக்கியுள்ளது.
இந்தத் தொடரில் முன்னதாக அருண் என்பவர் பாரதியாக நடித்த நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் சிபு சூர்யன் பாரதியாக களமிறங்கியுள்ளார்.
முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி பாதியிலேயே விலகிய நிலையில், வினுஷா களமிறங்கினார். இதனிடையே இரண்டாவது சீசனிலும் இவரே தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா 2 தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்த பாரதி கண்ணம்மா தன்னுடைய முதல் சீசனை சிறப்பாக முடித்து தற்போது இரண்டாவது சீசனை துவக்கியுள்ளது. முதல் சீசனில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக இருந்த நிலையில், இடையிலேயே அவர் சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து கண்ணம்மாவாக வினுஷா களமிறங்கி, சீரியல் நிறைவடையும் வரையில் சிறப்பான நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள இரண்டாவது சீசனிலும் அவர் கண்ணம்மாவாகவே நடித்து வருகிறார்.

பாரதி -கண்ணம்மா காதல்
முன்னதாக முதல் சீசனில் பாரதியாக அருண் நடித்த நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் சிபு சூரியன் பாரதியாக நடித்து வருகிறார். முதல் சீசனில் டாக்டராக பாரதி கேரக்டர் இருந்த நிலையில், தற்போது ஊதாரி கேரக்டரில் பாரதி கேரக்டர் காணப்படுகிறது. ஜெயில் கைதியாக வெளியில் வரும் சித்ரா, கண்ணம்மாவாக மாற, அவருக்கும் பாரதிக்கும் ஏற்படும் காதல் மற்றும் அதையொட்டிய காட்சிகள் தற்போது அடுத்தடுத்த எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன.

வில்லியாக களமிறங்கிய வெண்பா
இந்தக் காதலில் வில்லி இல்லாமலா.. இருக்கவே இருக்காங்க வெண்பா. இந்த சீரியலில் அவங்க வெளிநாட்டில் படித்துவிட்டு ஊருக்கு வர்றாங்க. எங்க படிச்சாலும் வில்லத்தனம் போகுமா என்ன. தன்னுடைய முறைப்பையன் பாரதியை தான் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று கூறும் வெண்பாவிற்கு அவர்களின் சொத்து மட்டும் தேவையாக இருக்கிறது. சவுந்தர்யாவை திட்டம் போட்டு கவரும் வெண்பா, பள்ளி நிர்வாகத்தை தன்வசப்படுத்துகிறார்.

அப்பா குறித்து கண்ணம்மா நெகிழ்ச்சி
அங்கே வேலை செய்யும் கண்ணம்மாவை பழிவாங்க அவருக்கு சிறப்பான அடித்தளம் இதன்மூலம் கிடைக்கிறது. ஆனால் இந்தக் காட்சியில் ட்விஸ்ட்டாக, கண்ணம்மா, வெண்பாவை கலாய்த்துவிட்டு போகிறார். இதனிடையே தன்னுடைய அப்பா, தனக்காக தன்னுடைய தம்பியிடம் கோபித்துக் கொண்டதாகவும் அவரது மாற்றம் தனக்கு இதமாக இருந்ததாகவும் கண்ணம்மா, பாரதியிடம் தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

கண்கலங்கிய பாரதி
அப்பா பாசத்திற்காக ஏங்கி வளர்ந்தவர்களுக்குத்தான் தன்னுடைய கஷ்டம் புரியும் என்றும் பாரதியிடம் கண்ணம்மா கூறுகிறார். தொடர்ந்து, பாரதியின் அப்பா பெரிய பணக்காரர், ஜமீன் என்பதால் திகட்ட திகட்ட பாசத்தை கொடுத்திருப்பார் இல்ல என்று கேள்வி எழுப்புகிறார். இதைக்கேட்டவுடன் கண்கலங்குகிறார் பாரதி. இதையடுத்து தவிக்கும் கண்ணம்மா, காரணம் கேட்க, தனக்கு அப்பாவின் நியாபகம் வந்துவிட்டதாக பாரதி கூறுகிறார். இவ்வாறு பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











