அடுத்த சீசனுக்கு தயாரான பாரதி கண்ணம்மா சீரியல்.. கலக்கல் ப்ரமோ வெளியீடு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா இன்றுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த சில தினங்களாக, இந்தத் தொடரின் க்ளைமாக்சையொட்டி பல களேபரங்கள், கொண்டாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பையும் ப்ரமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாரதி கண்ணம்மா உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சுவாரஸ்யமான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்வித்த இந்தத் தொடரில் துவக்கத்தில் அருண் மற்றும் ரோஷினி இணைந்து நடித்து சுவாரஸ்யத்தை கூட்டினர்.

புதிய கண்ணம்மா
இடையில் சில காலம் ரசிகர்களை கவர இந்தத் தொடர் தவறியது. மேலும் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியும் தொடரிலிருந்து விலகியதும் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து கண்ணம்மாவாக வினுஷா களமிறங்கினார். தொடர்ந்து தொடரை சுவாரஸ்யமாக்க இயக்குநர் சிலவற்றை சீரியலில் புகுத்தினார்.

நிறைவடையும் பாரதி கண்ணம்மா தொடர்
ஆனாலும் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் தற்போது எண்ட் கார்ட் போட்டுள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு, தங்களது வாழ்க்கையை மீண்டும் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டிய ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

திருமண புடவை நெய்த பாரதி
கடந்த சில தினங்களாகவே இந்தத் தொடரில் திருமண களேபரங்கள், கொண்டாட்டங்கள், உற்சாகங்கள் என களைகட்டி வருகிறது. தன்னுடைய மனைவி கண்ணம்மாவிற்காக பாரதி, தானே தன்னுடைய கைகளால் திருமண புடவை நெய்து கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவமும் நடைபெற்றது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர்
இன்றுடன் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது சீசனும் துவங்கவுள்ளதாக விஜய் டிவி புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது. வரும் 6ம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலக்கலான புதிய ப்ரமோ
இந்தத் தொடரில் கண்ணம்மாவாக வினுஷாவே நடிக்கும் நிலையில், பாரதியாக அருணுக்கு பதிலாக சிபு சூர்யன் இணைந்துள்ளார். கலக்கலான கிராமத்து பின்னணியில் இந்தத் தொடர் புதிய பரிணாமங்களுடன் மாறுபட்ட கதைக்களத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications