வெண்பா எனக்கு ஏத்த ஆளே கிடையாது.. உண்மையை உரக்க சொன்ன பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்த பாரதி கண்ணம்மா தொடரின் முதல் சீசன் நிறைவடைந்து தற்போது 2வது சீசன் துவங்கியுள்ளது.
இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக நடித்துவந்த அருண் விலகிய நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் சிபு சூர்யன் பாரதியாக களமிறங்கியுள்ளார்.
முதல் சீசனில் நடித்துவந்த சிலர், இரண்டாவது சீசனிலும் அதே கேரக்டர்களின் பெயரிலேயே தற்போது நடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் முதல் சீசனில் அருண், ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். காதல், அதையொட்டிய சந்தேகம், சூழ்ச்சி, பிரிவு என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே இந்தத் தொடர் பெற்றிருந்தது. இதனிடையே ரோஷினியின் விலகல், கதைக்களத்தில் தொய்வு என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி தொடர் ரசிகர்களை கவரத் தவறியது.

புதிய கண்ணம்மாவாக வினுஷா
புதிய கண்ணம்மாவாக வினுஷா களமிறங்கினார். அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் இந்தத் தொடருக்கு வரவேற்பு குறைந்தது. தொடர்ந்து இந்தத் தொடர் எப்போது நிறைவடையும் என்று ரசிகர்களே கேட்கும் அளவிற்கு மாறியது. இதையடுத்து ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட இயக்குநர், சீரியரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைத்து அவர்களுக்கு திருமணமும் செய்துவைத்து சீரியலை முடித்து வைத்தார்.

பாரதி கண்ணம்மா
இதையடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் விடாது கருப்பு என்று எண்ணும் படியாக இரு தினங்களிலேயே பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடரை சீரியல் தரப்பு துவங்கியது. இந்தத் தொடரிலிருந்து அருண் விலகிக் கொள்ள புதிய பாரதியாக களமிறங்கியுள்ளார் ரோஜா சீரியல் புகழ் சிபு சூர்யன். முதல் சீசனில் டாக்டராக வந்த பாரதி, இந்த சீசனில் ஊதாரியாக ஊர்சுற்றும் கேரக்டராக மாறியுள்ளது.

கண்ணம்மாவாக மாறிய சித்ரா
சிறைக்கு சென்று வெளியில் வந்த சித்ரா, கண்ணம்மாவாக மாறியுள்ள நிலையில், அவருக்கும் பாரதிக்கும் ஆரம்பத்தில் மோதல் ஏற்பட, தொடர்ந்து அவரது பள்ளியிலேயே வேலைக்கு செல்கிறார் கண்ணம்மா. இதையடுத்து இருவரும் தனியாக வெளியூருக்கு செல்லும் சூழல், ஏற்பட அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுகிறது. இதையடுத்து வில்லன்களிடம் இருந்து கண்ணம்மாவை பாரதி காப்பாற்றுகிறார். சும்மா இல்லீங்க சூப்பர் ஸ்டண்ட் போட்டுதான் இதை செய்கிறார்.

காதல் + திருமணம்
தொடர்ந்து அவர்களிடம் இருந்து பாரதியை காப்பாற்றும் படலத்தில் கண்ணம்மாவிற்கு காயம் ஏற்பட, சீட் பெல்ட் போடுவதில் இருந்து அவருக்கு உதவி செய்கிறார் பாரதி. இவங்க சேப்டர் எப்படியும் காதல் + திருமணத்தில்தான் முடியும் என்பது தற்போதே ரசிகர்களுக்க தெரிந்துவிட்டது. இதனிடையேதான் கதையில் பெரிய ட்விஸ்டாக வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு பாரதியின் முறைப்பெண்ணாக வருகிறார் வெண்பா. ஆமாங்க முதல் சீசனில் வில்லத்தனம் செய்த அதே வெண்பாதான்.

வில்லத்தனம் செய்யும் குடும்பத்தினர்
இந்நிலையில் இந்த சீசனில் வெண்பாவின் அம்மாதான் முதல் வில்லி. தன்னுடைய பெண்ணை பாரதிக்கு திருமணம் செய்து அந்த ஜமீனை கைப்பற்ற அவர் தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் செய்கிறார். ஆனால் தான் பாரதியை திருமணம் செய்ய முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார் வெண்பா. அதேபோல பாரதியும் சிறுவயதில் இருந்தே தனக்கும் வெண்பாவிற்கும் செட் ஆகாது என்றும் அவளுடைய சூழல், குணநலன்கள் தனக்கு செட் ஆகாது என்றும் பாரதியும் கூறுவதாக இந்தத் தொடரின் ப்ரமோ அமைந்துள்ளது.

வெண்பாவின் வில்லத்தனம்
முன்னதாக இந்தத் தொடரில் வெண்பா கேரக்டரின் அறிமுகத்தின்போது தன்னைத் தாண்டி யாரையும் முன்னே செல்ல விட மாட்டேன் என்று கூறுவதாக ப்ரமோ அமைந்தது.ஆம்புலன்சிற்குகூட வழிவிடாமல் அவர் செல்வதாக அந்த ப்ரமோவில் அமைந்திருந்தது. இந்நிலையில், பாரதி தன்னை வேண்டாம் என்று கூறுவதும் தொடர்ந்து பாரதி -கண்ணம்மா இணைவதும் வெண்பாவை வெறுப்பேற்றி வில்லத்தனத்தை மேற்கொள்ள வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே அவரது குடும்பத்தினரும் சேர்ந்துக் கொண்டு பாரதி -கண்ணம்மாவின் பிரிவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications











