மாமியாரின் தாலியை கொண்டு கண்ணம்மாவிற்கு தாலி செய்ய சொல்லும் பாரதி.. கதையில் ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தொடரில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு திருமணம் நடத்தும் நிகழ்ச்சி தற்போது களைகட்டியுள்ளது.
இந்தத் திருமணத்தையொட்டிய சுவாரஸ்யங்கள் மற்றும் பிரச்சினைகளை மையமாக கொண்டு காட்சி அமைப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி ஒருவழியாக எண்ட் கார்ட் போடப்படவுள்ளது. பாரதிக்கு தலையில் அடிபட்டு அவர் பழைய நினைவுகளை இழந்த நிலையில், அவரை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர கண்ணம்மா முயன்றார். இதையடுத்து அவருக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்துள்ளன.

பாரதி -கண்ணம்மா திருமணம்
இதையடுத்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதை கொண்டாடும்வகையில் இருவருக்கும் திருமணம் செய்யவும் அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொடர்ந்து இதையொட்டிய சுவாரஸ்யமான சம்பவங்கள் அடுத்தடுத்த எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன.

முகூர்த்த புடவை நெய்த பாரதி
இரவு முழுவதும் கண்விழித்து பாரதி, கண்ணம்மாவின் முகூர்த்த சேலையை தானே தறியில் நெய்து அதை திருமண பரிசாக கண்ணம்மாவிற்கு கொடுக்கிறார். இதனால் கண்ணம்மா மிகுந்த நெகிழ்ச்சியடைகிறார். அந்த முகூர்த்த புடவையில் கண்ணம்மாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு அனைவரும் பாராட்டுகின்றனர்.

புதிய தாலி செய்யச் சொல்லும் பாரதி
தொடர்ந்து கண்ணம்மாவின் தாலி காணாமல் போகும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதையடுத்து கண்ணம்மாவின் அம்மா தாலியை கொடுத்து அதை வைத்து அவருக்கு தாலி செய்ய சொல்கிறார் பாரதி. அம்மாவின் தாலி ஒரு பெண்ணுக்கு தாலியாக கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று ஊர் மக்கள் அனைவரும் பாரதிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.

புதிய ப்ரமோ
இவ்வாறு இன்றைய எபிசோடின் ப்ரமோ காணப்படுகிறது. தொடர்ந்து பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளதையும் பாரதியின் அம்மா சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் பரபரப்பாக காணப்படுவதையும் தற்போதைய ப்ரமோவில் கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











