வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம்.. பரபரப்பான எபிசோட்கள்.. விரைவில் நிறைவடைகிறதா பாரதி கண்ணம்மா தொடர்?

சென்னை : விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக தொய்வில் இருந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது சூடு பிடித்துள்ளது.

இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாரதிக்கு ஹேமா மற்றும் லஷ்மி குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளது.

இதனிடையே கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போட முயன்ற வெண்பாவின் குட்டு வெளிப்பட்டுள்ளதையடுத்து சவுந்தர்யா அவர்மீது மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் சேனலின் பாரதி கண்ணம்மா தொடரும் ரசிகர்களிடையே சிறப்பான கவனத்தை பெற்றது. ஆனால் அந்த சீரியலில் செய்யப்பட்ட நடிகர்கள் மாற்றம் மற்றும் ஒரே மாதிரியான காட்சிகள் ரசிகர்களை கடுப்பேற்றியது.

பரபரப்பான காட்சிகள்

பரபரப்பான காட்சிகள்

இதையடுத்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தொடர்ந்து இறங்குமுகமாக மாறியது. கடந்த வாரங்களில் டிஆர்பியில் 8வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

உண்மையை சொன்ன கண்ணம்மா

உண்மையை சொன்ன கண்ணம்மா

பிறந்தநாள் விழாவில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை கொடுப்பதாக பாரதி ஹேமாவிற்கு உறுதியளிக்கிறார். அதன்படி தன்னுடைய பழைய காதலியின் புகைப்படத்தை அவர் காண்பிக்க இதையடுத்து பொங்கி வெடிக்கிறார் கண்ணம்மா. தன்னுடைய மகளுக்கு யாரையோ அம்மாவாக காண்பிப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.

விஷ ஊசி போட நினைத்த வெண்பா

விஷ ஊசி போட நினைத்த வெண்பா

இதையடுத்து தான்தான் ஹேமாவின் அம்மா என்ற உண்மையை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைக்கிறார். மேலும் வெண்பா தான் பிரசவத்தின்போது துடித்துக் கொண்டிந்த நிலையில், தனக்கு விஷ ஊசி போட நினைத்ததையும் அவர் வெளிப்படுத்துகிறார். இதையடுத்து அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

வெளுத்து வாங்கும் சவுந்தர்யா

வெளுத்து வாங்கும் சவுந்தர்யா

இதனிடையே, தன்னுடைய மருமகளை விஷ ஊசிப் போட்டு கொல்ல நினைத்த வெண்பாவை சூப்பர் மார்க்கெட்டில் பார்க்கும் சவுந்தர்யா, அவரது கழுத்தை நெரித்தும், கன்னத்தில் அறைந்தும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரை தான் சும்மா விட மாட்டேன் என்றும் கூறுகிறார்.

 மீண்டும் என்ட்ரி கொடுத்த ரேகா

மீண்டும் என்ட்ரி கொடுத்த ரேகா

கடந்த சில வாரங்களாக காணாமல் போயிருந்த வெண்பாவின் அம்மா ஷர்மிளா தற்போது மீண்டும் சீரியலில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மகளை பார்க்க வந்த அவரிடம், அங்குவரும் சவுந்தர்யா, வெண்பாவின் திருமணம் குறித்து பேசுகிறார். ஆடி மாதம் முடியப் போகிறது என்றும் அவரது திருமணத்தை நடத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம்

வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம்

சில தினங்களில் திருமணத்தை எப்படி நடித்துவது என்று ஷர்மிளா கேட்க, அப்படியென்றால் நிச்சயதார்த்தத்தை நடத்திவிடலாம் என்று சவுந்தர்யா கூறுகிறார். இதையடுத்து உடனடியாக ஷர்மிளா ஓகே சொல்கிறார். வெண்பா மறுப்பு தெரிவித்த நிலையில், அவரிடம் உறுதியாக நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறுகிறார்.

Recommended Video

ArunVijay VaniBojan | இது ரொம்ப serious ஆன படம் | TamilRockers | *Launch
நிறைவடைகிறதா பாரதி கண்ணம்மா?

நிறைவடைகிறதா பாரதி கண்ணம்மா?

தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடர் நிறைவடைய உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது இந்தத் தொடரில் பாரதி, கண்ணம்மா இணைவதை தொடர்ந்து தடுத்துவரும் வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீரியல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X