தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடீ.. வெண்பாவின் மனநிலை புரியாத ரோகித்!
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் சிறப்பான ப்ரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் வெண்பாவின் மனநிலை புரியாமல் ரோகித் அவரிடம் ரொமான்ஸ் செய்கிறார்.
முன்னதாக இந்தத் திருமணம் நடக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும் வெண்பா ஒரு திட்டத்துடன்தான் உள்ளதாகவும் கண்ணம்மா அவரிடம் கூறுகிறார்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தற்போது இறுதி எபிசோட்களை ஒளிபரப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியில் தற்போது வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வெண்பாவின் திருமண ஏற்பாடுகள்
இன்னும் சில மணிநேரங்களில் ரோகித்துடன் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அழகான கெட்டப்புடன் வெண்பா காட்சியளிக்கிறார். அவரின் செயல்பாடுகள் அவரது அம்மாவிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சந்தேகத்தை அவர் வெண்பாவிடம் கேட்ட நிலையில், கண்கலங்கியவாறே தன்னை நம்புமாறு அவரை கன்வின்ஸ் செய்கிறார் வெண்பா.

கண்ணம்மாவின் சந்தேகம்
இதனிடையே கண்ணம்மாவும் இதே சந்தேகத்தை வெண்பாவிடம் கூறுகிறார். வெண்பா திருந்திவிட்டதாகவும் ரோகித்தை திருமணம் செய்வார் என்பதை நம்ப தான் ஒன்றும் பால் குடிக்கும் குழந்தை இல்லை என்று கண்ணம்மா வெண்பாவிடம் கூறுகிறார். இதைக் கேட்டு வெண்பா அதிர்ச்சியடைகிறார்.

டிஎன்ஏ ரிசல்ட்டிற்காக வெயிட்டிங்
இதனிடையே ஒரு பக்கம், தன்னுடைய டிஎன்ஏ ரிசல்ட்டிற்காக பாரதி காத்திருக்கிறார். அந்த ரிசல்ட் வந்தால் மட்டுமே, தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தகட்டமாக தான் முடிவெடுக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். கண்ணம்மாவுடன் சேர்வதா அல்லது வெண்பாவை திருமணம் செய்வதா என்ற குழப்பத்திற்கான முடிவை அந்த டெஸ்ட் ரிசல்ட் மட்டுமே கொடுக்கும் என்று அவர் நினைக்கிறார்.

ரோகித் ரொமான்ஸ்
இந்நிலையில் பாரதியுடன் சேரும் வெண்பாவின் முடிவு தெரியாமல், அவர் தன்னை திருமணம் செய்ய முழுமனதுடன் தயாராகியுள்ளதாக நினைக்கும் ரோகித், அவருடன் திருமணத்திற்கு முன்பு ரொமான்ஸ் செய்ய அவரது அறைக்கு வருகிறார். தொடர்ந்து வெண்பாவின் வேலைக்காரியை அங்கிருந்து விரட்டிவிட்டு ரொமான்ஸ் திற்செய்கிறார்.

முத்தம் கேட்கும் ரோகித்
திருமணத்திற்கு முன்பு தனக்கு தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் தருமாறு கேட்கிறார். வெண்பாவை நெருங்க அவர் முயற்சிக்க, அவரைப் பிடித்து தள்ளி விடுகிறார் வெண்பா. இதனிடையே ரோகித்தின் நண்பர் அங்கே வர, அவரது ரொமான்ஸ் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு புதிய ப்ரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











