Bharathi kannamma 2 :கண்ணம்மா அக்கா கல்யாணத்தை நிறுத்தும் பாரதி.. அன்புவுடன் இணையும் சாந்தி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா சீசன் 2 மாறியுள்ளது. இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்தது.

உடனடியாக சில தினங்களிலேயே பாரதி கண்ணம்மா சீசன் 2 துவங்கியது. இதில் பாரதி உள்ளிட்ட சில விஷயங்கள் மாற்றப்பட்டிருந்தன.

முன்னதாக பாரதி கேரக்டரில் நடிகர் அருண் நடித்திருந்தார். தற்போது சீசன் 2வில் நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். கண்ணம்மாவாக வினுஷாவே நடித்து வருகிறார்.

Vijay TVs Bharathi kannamma serial new promo makes fans more happy

அன்புவுடன் இணையும் கண்ணம்மாவின் அக்கா : விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்த பாரதி கண்ணம்மா தொடர் கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்தது. முன்னதாக சேனலின் முன்னணி தொடராக இருந்த பாரதி கண்ணம்மா, தொடர்ந்து ஒரே மாதிரியான எபிசோட்களை கொடுத்து வந்த நிலையில், ரசிகர்கள் அந்த தொடர் குறித்து அதிருப்தியை வெளியிட்டனர். இதையடுத்து பாரதி கண்ணம்மா தொடர் கடந்த பிப்ரவரியில் முடிக்கப்பட்டது. இதையடுத்து சில தினங்களிலேயே இந்தத் தொடரின் அடுத்த சீசன் துவங்கியது.

முதல் சீசனில் மருத்துவராக அமைதியான மற்றும் சில நேரங்களில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திய அருண், இரண்டாவது சீசனில் இடம்பெறவில்லை. மாறாக சன் டிவியின் ரோஜா சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சிபு சூர்யன், இந்த தொடரின் பாரதியாக களமிறங்கியுள்ளார். இவர், இந்தத் தொடரில் வீட்டிற்கு அடங்காதவராக, ஊதாரியாக, குடிகாரராக நடித்து வந்தார்.

இந்நிலையில், சிறுவயதில் போன கண்ணம்மா அந்த ஊருக்கு திரும்பி வருகிறார். அவருக்கும் பாரதிக்கும் முதலில் சண்டையில் துவங்கி, தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர். கண்ணம்மா தன்னுடைய காதலை வெளிப்படுத்தவில்லை என்ற போதிலும், அவருக்கு காதல் இருப்பதை அவருடைய நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் கண்ணம்மா இல்லை. சித்ரா என்ற சிறை தண்டனை கைதி என்பதும் கண்ணம்மா கொல்லப்பட்டதும் முன்னதாக காட்டப்பட்டது.

Vijay TVs Bharathi kannamma serial new promo makes fans more happy

இந்நிலையில் கண்ணம்மாவின் அக்கா சாந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடன் வாங்கி அந்தத் திருமணத்தை அவரது அப்பா ஏற்பாடு செய்கிறார். 30 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் என மாப்பிள்ளை வீட்டார் கேட்பதை எல்லாம் கொடுத்து தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இந்நிலையில், மாப்பிள்ளை திருமண மோசடி பேர்வழி என்பதை திருமண மேடையில் பாரதி கண்டு பிடிக்கிறார். இதையடுத்து சாந்தியின் திருமணம் நிற்கிறது.

இதையடுத்து குடும்பமே நிலை குலைகிறது. இனி தன்னுடைய பெண்ணை யார் கட்டிக் கொள்வார்கள் என்று சாந்தியின் அம்மாவும் அப்பாவும் கதி கலங்குகின்றனர். அப்போதுதான் பாரதி அன்புவை அழைத்துவந்து இவர் கட்டிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறுகிறார். ஆனால் முன்னதாக சாந்தி அவரது காதலை நிராகரித்த நிலையில், தன்னுடைய அம்மாவின் வற்புறுத்தலுக்காக அவர் அன்புவை வெறுப்பாக கட்டிக் கொள்ள சம்மதிக்கிறார். திருமணம் நடந்து முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X