திடீர் ஞானோதயத்திற்கு காரணம்.. அனைவரிடமும் கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட பாரதி!

சென்னை : விஜய் டிவியின் கலக்கல் நிகழ்ச்சியாக பாரதி கண்ணம்மா உள்ள நிலையில், சில எபிசோட்கள் களைகட்டாமல் இருந்தது.

ஆனால் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடர் ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

பாரதிக்கு கண்ணம்மா மற்றும் தனது குழந்தைகள் குறித்த உண்மை தெரியவந்துள்ள நிலையில் அவர் உடைந்துப் போயுள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொர்களுக்கு கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த வகையில் அதிகமான டிஆர்பியை சேனலின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே சீசன் 2 ஆகிய தொடர்கள் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை பாரதி கண்ணம்மா கொடுத்துவருகிறது.

பாரதியின் உறுதி

பாரதியின் உறுதி

இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில வருடங்களாக ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் தொடரை நீட்டிவந்தார் பாரதி. வெண்பா ஏற்படுத்திய குழப்பத்தை தொடர்ந்து கண்ணம்மா மீது சந்தேகம் கொண்ட அவர், ஹேமா மற்றும் லஷ்மி இருவரும் தனது குழந்தைகள் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். தன்னுடைய தோழி வெண்பா மீது வைத்த நம்பிக்கையை அவர் தனது மனைவி மீது வைக்காமல் இருந்ததே தொடரின் நகர்வுக்கு காரணமாக அமைந்தது.

 பாரதியின் சந்தேகம்

பாரதியின் சந்தேகம்

தொடர்ந்து அவரது சந்தேகத்தை வைத்தே கதைக்களம் காணப்பட்டது. அடுத்தடுத்த எபிசோட்களும் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து கண்ணம்மா களங்கமற்றவர் என்பதை அறிந்துக் கொண்டுள்ளார் பாரதி. மேலும் ஹேமா மற்றும் லஷ்மி இருவரும் தனது குழந்தைகள் தான் என்பதையும் அறிந்துக் கொண்டுள்ளார்.

கதறலுடன் உண்மையை சொன்ன பாரதி

கதறலுடன் உண்மையை சொன்ன பாரதி

தன்னுடைய அப்பா குறித்த உண்மை தெரியவேண்டும் என்று கூறி ஹேமா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு வந்த பாரதி, கதறலுடன் தான்தான் ஹேமாவின் தந்தை என்பதை அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்தார். தொடர்ந்து கண்ணம்மாதான் தன்னுடைய மனைவி என்றும் கூறுகிறார். இவரது இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது தனக்கு தெரியவேண்டும் என்று கண்ணம்மா உறுதியுடன் கூறுகிறார்.

கண்ணம்மாவின் கேள்வி

கண்ணம்மாவின் கேள்வி

கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத ஞானோதயம் திடீரென அவருக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் கண்ணம்மா கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசும் பாரதி, முதலில் தன்னை அனைவரும் மன்னிக்க வேண்டும், தான் மிகப்பெரிய தவறுகளை செய்து விட்டதாகவும் பாரதி கைக்கூப்பி மன்னிப்பு கேட்கிறார். இதுபோல இந்தத் தொடரின் ப்ரமோ காணப்படுகிறது.

நிறைவடையுமா தொடர்?

நிறைவடையுமா தொடர்?

பாரதி மற்றும் கண்ணம்மா இணைவதாக தொடரை இயக்குநர் முடிப்பாரா அல்லது தொடரின் அடுத்த சீசன் தொடருமா என்பது குறித்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக தன்னை நோகடித்த அவருடன் இணைந்து வாழ்வது குறித்த எந்த மாதிரியான முடிவை கண்ணம்மா எடுப்பார் என்று தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X