சிங்கம் போல வீட்டை கட்டுப்படுத்துபவர்.. முத்து அண்ணாவுக்குத்தான் கொடுக்கணும்.. வருத்தப்பட்ட மைனா!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 14வது நாளை எட்டியுள்ளது.

இதையடுத்து அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனிடையே நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோவில் ஜிபி முத்துவை நினைவுப்படுத்தி அனைவரையும் வருத்தப்பட செய்தார் மைனா நந்தினி.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 5 சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனை கடந்த 9ம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 14வது நாளை எட்டியுள்ளது. இந்த இரு வாரங்களிலேயே பலவிதமான அனுபவங்களை இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

வெளியேறிய ஜிபி முத்து

வெளியேறிய ஜிபி முத்து

நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக கருதப்பட்ட ஜிபி முத்து தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த இரு வாரங்களாக நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்த அவர், பிக்பாஸ், கமல்ஹாசன் மற்றும் சக போட்டியாளர்களின் அறிவுரையை ஏற்காமல் தன்னுடைய வீட்டிற்கு போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து

இதனிடையே நேற்றைய பொழுது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். பேர், புகழ் போன்றவை தன்னை எந்தவகையிலும் கட்டுப்படுத்தாது, தன்னுடைய குடும்பமே தனக்கு முக்கியம் என்பதை நிரூபித்து, முன்பை விட ரசிகர்களின் இதயத்தில் பிரம்மாண்டமான இடத்தை பிடித்துள்ளார் ஜிபி முத்து.

விஷத்தை கக்கும் தனலட்சுமி

விஷத்தை கக்கும் தனலட்சுமி

இதனிடையே இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 14வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. தற்போது இரண்டாவது ப்ரமோவில் பாம்பை போல விஷத்தை கக்குபவராக மைனா நந்தினி, தனலட்சுமியை தேர்ந்தெடுத்தார். தனலட்சுமியோ அதில் அசீமை தேர்ந்தெடுத்தார்.

ஜிபி முத்துவின் சிங்கம் போன்ற தலைமை

ஜிபி முத்துவின் சிங்கம் போன்ற தலைமை

இதேபோல நரிபோல குறுக்குப் புத்தி கொண்டவராக மைனா, மகேஸ்வரியை தேர்ந்தெடுக்கிறார். அவரோ நிகழ்ச்சியில் நரிபோல ட்விஸ்ட் செய்து விளையாடுவதாக அசீமை தேர்ந்தெடுக்கிறார். இதனிடையே, சிங்கம் போல வீட்டை கட்டுப்படுத்துபவராக நந்தினி தேர்ந்தெடுக்க விரும்பும் நபராக ஜிபி முத்துவை குறிப்பிடுகிறார். இதற்கு பார்வையாளர்கள் மிகுந்த கைத்தட்டலை வெளிப்படுத்துகின்றனர்.

நிகழ்ச்சியின் முதல் தலைவர்

நிகழ்ச்சியின் முதல் தலைவர்

ஜிபி முத்து நிகழ்ச்சியை விட்டு விலகினாலும் அவரை சக போட்டியாளர்களும் ரசிகர்களும் இன்னும் சில தினங்களுக்காவது நியாபகத்தில் வைத்திருப்பார்கள். அந்த அளவில் அவர் நிகழ்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராகவும் முதல் தலைவராகவும் அவர் மாறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X