பிரபுதேவா போல ஆடி கல்லா கட்டிய கதிரவன்.. இது என்ன புது டாஸ்க்கா இருக்கே!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 58வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் இன்றைய தினம் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடி கல்லா கட்டினர்.

ஒவ்வொருவரும் வித்தியாசமான கெட்டப்புகளில் ஆட்டம் போட்டு சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்தனர்.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் போட்டியாளர்களின் சிறப்பான நடனத்தை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முதன்மையான நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை முடித்துவிட்டு தற்போது 6வது சீசனை நடத்தி வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

களைகட்டும் டாஸ்க்குகள்

களைகட்டும் டாஸ்க்குகள்

இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் களத்தில் இறங்கிய நிலையில், வைல்ட் கார்ட் சுற்றில் நடிகை மைனா களமிறங்கினார். அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியாளராக எலிமினேட் ஆன நிலையில், கடந்த வாரத்தில் குயின்றி எலிமினேட் ஆனார். இதனிடையே அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

கமல்ஹாசனின் தொகுப்பு

கமல்ஹாசனின் தொகுப்பு

தன்னுடைய பங்கிற்கு தொகுப்பாளர் கமல்ஹாசனும் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் கிடைக்கும் கேப்பில் இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். நல்லதை பார்த்து பாராட்டவும் செய்யும் கமல்ஹாசன், மோசமான செயல்பாடுகளை கண்டித்தும் வருகிறார். சில விஷயங்களை அவர் கண்டுக் கொள்ளாமல் விடுவதும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

இன்றைய தினம் 58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எட்டியுள்ளது. தினந்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுக்க போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயற்சித்து வருகின்றனர். அதில் ஒரு சில டாஸ்க்குகள் களைகட்டினாலும், சில டாஸ்க்குகள் சொதப்புவதையும் தவிர்க்க முடியவில்லை. ஜிபி முத்து நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்.

டான்ஸ் டாஸ்க்

டான்ஸ் டாஸ்க்

இதனிடையே இன்றைய தினம் டான்ஸ் டாஸ்கை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரமோவில், போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமான கெட்டப்புகளில் டான்ஸ் செய்ய தயாராக அமர்ந்துள்ளனர். இதில் கதிரவன் ஆட்டத்தை ப்ரமோவில் பார்க்க முடிந்தது. மங்கை நிலாவின் தங்கை என்ற பாடலுக்கு அவர் பிரபு தேவாவிற்கே டப் கொடுக்கும் வகையில் ஆடியதையும் பார்க்க முடிந்தது.

கல்லா கட்டிய கதிரவன்

கல்லா கட்டிய கதிரவன்

அவருக்கு 9,000ஐ போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து கொடுத்தனர். மேலும் அவரது இந்த ஆட்டத்திற்கு மிகவும் அதிகமான வரவேற்பையும் போட்டியாளர்கள் கொடுத்தனர். இந்தப் ப்ரமோவில் அடுத்ததாக மைனா வடிவேலு கெட்டப்பில் காணப்பட்டார். அவர் எந்த மாதிரியான பர்பார்மென்சை கொடுப்பார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X