Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எனக்கு புறம்பேசும் புத்தி கண்டிப்பாக இருக்கு.. ஒப்புக் கொண்ட மைனா.. பிக்பாஸ் ப்ரமோவில் சுவாரஸ்யம்!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தினந்தோறும் சிறப்பான டாஸ்க்குகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் 24 மணிநேர ஒளிபரப்பை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்த வாரம் குயின்சி எலிமினேட் ஆன நிலையில், அடுத்தடுத்து ஹவுஸ்மேட்களுடன் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்.
பஜன்லால் சேட்டுன்னு முதல்ல சொன்னதே விஜய் தான்.. ப்ளூ சட்டை மாறன் ஷேர் பண்ண வீடியோ.. எதுக்கு?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக தொடர்ந்து 5 சீசன்களை முடித்து தற்போது 6வது சீசன் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியும் தற்போது 50 நாட்களை கடந்து ரசிகர்களுக்கு தினந்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது. ரசிகர்கள் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள்
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பி வரும் நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த போட்டியாளர்களின் எலிமினேஷன், பிரபல யூடியூபர் முத்துவின் வெளியேற்றம் என களைகட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் ரூம் போட்டு யோசிப்பார்களோ என அடுத்தடுத்த சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள், எலிமினேஷன்கள், அடிதடி சண்டைகள் என போட்டி ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது.

ரசிகர்களின் பதற்றம்
இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களமிறங்கிய ஜிபி முத்து சிறப்பான பல தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். இவருக்காக ஆர்மியும் துவங்கப்பட்டது. ஆனால் இடையிலேயே சொந்தக் காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை இவர் எடுத்த நிலையில், அடுத்ததாக நிகழ்ச்சி எப்படி செல்லுமோ என்ற பதற்றம் ரசிகர்களை ஆட்கொண்டது.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிய கமல்
ஆனால் அவரது இடத்தை அசீம், தனலட்சுமி, ஷிவின் உள்ளிட்டவர்கள் எடுத்துக் கொண்டனர். இவர்களது அடுத்தடுத்த நடவடிக்கைகள் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியது. நிகழ்ச்சியிலிருந்து சாந்தி, ராபர்ட் உள்ளிட்டவர்கள் எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் குயின்சியும் எலிமினேட் ஆனார். இதையடுத்து தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசினார் கமல்ஹாசன்.

புறம் பேசும் மைனா
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோவில் ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசுபவர்கள் குறித்து பேசினர். இதுகுறித்த கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தனலட்சுமி, ஜனனி உள்ளிட்டவர்கள் தங்கள் முன்னால் பாராட்டும் மைனா, பின்னால் சென்று புறம்பேசுவார் என்று தெரிவித்தனர். இதையடுத்து பேசிய மைனா, தனக்கு புறம்பேசும் புத்தி இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்தடுத்த பரபரப்புகள்
தொடர்ந்து இந்த ப்ரமோவில் பேசிய விக்ரமன் உள்ளிட்டவர்கள் அசீம் இவ்வாறு புறம் பேசுவதாக குறிப்பிட்டனர். இன்றைய தினம் 56வது நாளை எட்டியுள்ள இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்புகள் காணப்படுகின்றன. வாராவாரம் வரும் கமல்ஹாசனுடம் தன்னுடைய பங்கிற்கு நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறார்.