இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் சீசன் 6.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்.. இதோ புதிய ப்ரமோ!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.

கடந்த 5 சீசன்களை மிகவும் சிறப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.

இதனிடையே வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக உள்ள பிக்பாஸ், தொடர்ந்து பல்வேறு போட்டியாளர்களுடன் 5 சீசன்களை முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியே ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்கள் மற்றும் இதனால் மாறும் அவர்களின் வாழ்க்கைசூழல் ஆகியவைதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் மனிதர்களின் குணம்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி. பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதையும் அவர்களின் சண்டைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், அழுகை, காதல், ரொமான்ஸ் என அனைத்தையும் இந்த நிகழ்சசியின் மூலம் ரசிகர்கள் பார்க்கின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

கடந்த சீசனிலும் சிறப்பான போட்டியாளர்களுடன்தான் இந்த நிகழ்ச்சி களமிறங்கியது. இதில் அனைவரையும் கவர்ந்து நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார் ராஜு. தொடர்ந்து ரன்னர் அப் டைட்டிலை வென்றார் பிரியங்கா தேஷ்பாண்டே. இதையடுத்து இந்தப் நிகழ்ச்சியின் வரவேற்பை பார்த்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

9ம் தேதி துவங்கும் நிகழ்ச்சி

9ம் தேதி துவங்கும் நிகழ்ச்சி

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து சூட்டிங் உள்ளிட்ட காரணங்களால் கமல்ஹாசன் விலக, சிம்பு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் 9ம் தேதி மாலையில் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, நிகழ்ச்சி குறித்த அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதையும் ப்ரமோ மூலம் கமல் தெரிவித்தார்.

இன்னும் 5 நாட்கள்

இன்னும் 5 நாட்கள்

இதனிடையே இந்த நிகழ்ச்சி துவங்க இன்னும் 5 நாட்கள்தான் உள்ளது என்றும் புதிய முகங்கள், புதுப்புது வியூகங்கள், அளவற்ற சுவாரஸ்யங்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தனது புதிய ப்ரமோவில் தெரிவித்துள்ளார். இன்னும் 5 நாட்களில் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X