பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் மகனுடன் இணைந்த தாமரை.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறியுள்ளார் நாடக கலைஞர் தாமரை.
இவர் தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இவர் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் டைட்டிலை ராஜு வெற்றிப் பெற்றார். இறுதிவரை ரசிகர்களை கட்டிப் போட்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் தாமரை.

பிக்பாஸ் போட்டியாளர் தாமரை
விஜய் டிவியின் முக்கியமான ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்களில் முக்கியமானவர் தாமரை. நாடகக் கலைஞரான தாமரை, துவக்கத்தில் சாதாரணமாக தென்பட்டாலும் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக அதிகமான டஃப்பான போட்டியாளராக மாறினார்.

பிரபலமான தாமரை
பிக்பாஸ் போட்டியை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் தாமரை. இந்தப் போட்டியில் தன்னுடைய கணவருடன் கலந்துக் கொண்டார். தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் தாமரை. பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், மற்ற போட்டியாளர்களை சந்தித்த தாமரையின் பயணங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

மகனை சந்திக்க ஏங்கிய தாமரை
இதனிடையே தன்னுடைய முதல் கணவருக்கு பிறந்த தன்னுடைய மகனை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும், நீண்ட நாட்களாக பார்க்காமல் தவித்து வருவதாகவும் தன்னை புரிந்துக் கொண்டு அவன் தன்னுடன் சேர வேண்டும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது தாமரை அழுகையினிடையே தெரிவித்திருந்தார். இது தற்போது நிஜமாகியுள்ளது.

மகனுடன் தாமரை சந்திப்பு
தன்னுடைய அம்மாவை புரிந்துக் கொண்ட, தாமரையின் முதல் கணவருக்கு பிறந்த அவரது மகன், தற்போது அவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துள்ளனர். அதன் புகைப்படத்தை தாமரை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து தாமரைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இறுதிவரை களத்தில் நின்ற தாமரை
நீண்ட நாட்களாக தன்னுடைய மகனை பார்க்க ஏங்கிய தாமரையை, காலம் தன்னுடைய மகனுடன் சேர்த்து வைத்துள்ளது என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த தாமரைச்செல்வி, இறுதிவரை களத்தில் நின்றார்.

படங்களில் கமிட்டாகிய தாமரை
பணத்தை எடுத்துக் கொண்டு பாதியில் போக வாய்ப்பு கிடைத்தும் பிக்பாஸ் வீட்டை விட்டு பாதியில் போக மாட்டேன் என்று இறுதிவரை உறுதியாக நின்றவர் தாமரை. இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தாமரைக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் தாமரை.


Click it and Unblock the Notifications