என்னது அமீர் -பாவ்னி சேர்ந்து படத்துல நடிக்கறாங்களா.. சூப்பர் காம்பினேஷன் ஆச்சே!

சென்னை : சின்னத்திரையும் பெஸ்ட் ஜோடியாக, ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்களாக விஜய் டிவியின் அமீர் -பாவ்னி உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5ல் துவங்கிய இவர்களது பழக்கம் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் தொடர்ந்துள்ளது.

டைட்டிலை வெற்றிக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் அதிகமான உழைப்பை செய்தனர். குறிப்பாக அமீரின் மெனக்கெடல் இந்த சீசனில் அதிகமாக காணப்பட்டது.

சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்கள்

வெள்ளித்திரையில் நடிகர்களுக்கு காணப்படும் வரவேற்பு சின்னத்திரையிலும் காணப்படுகிறது. சின்னத்திரையில் தங்களை நிரூபித்து ஏராளமான ரசிகர்களின் இதயங்களில் நுழையும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இதன்மூலம் சினிமாவில் கால்பதித்து அங்கும் வெற்றிக்கொடியை பதிக்கும் நிகழ்வுகளுக்கு உதாரணங்கள் தேவையில்லை.

விஜய் டிவி வெற்றியாளர்கள்

விஜய் டிவி வெற்றியாளர்கள்

குறிப்பாக விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சி வெற்றிப் பெற்றுவிட்டால் அதன் போட்டியாளர்களும் சிறப்பான கவனத்தை பெற்று விடுகின்றனர். தொடர்ந்து அவர்களை உடனடியாக சினிமாவில் பயன்படுத்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயாராகவே உள்ளனர்.

 அமீர் -பாவ்னி ஜோடி

அமீர் -பாவ்னி ஜோடி

இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன், சந்தானம், புகழ், ஷிவாங்கி என அடுத்தடுத்த பிரபலங்கள் காணப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது அடுத்ததாக இருவர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். ஆனால் இவர்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் ஜோடியாக இணைந்துள்ளனர். அமீர் -பாவ்னி ஜோடி தான் அது.

பாவ்னியிடம் காதல் சொன்ன அமீர்

பாவ்னியிடம் காதல் சொன்ன அமீர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்தான் இவர்கள் இருவரும் முதலில் அறிமுகமானார்கள். அந்த நிகழ்ச்சியிலேயே தன்னுடைய காதலை பாவ்னியிடம் சொல்லிவிட்டார் அமீர். அவருக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அமீரின் காதலை ஏற்காமல் தொடர்ந்து பல காரணங்களை சொல்லி வருகிறார் பாவ்னி.

 பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறிய இவர்கள், அடுத்ததாக பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2விலும் இணைந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரி தொடர்ந்தது. கொரியோகிராபரான அமீர், இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ரசிகர்களையும் நடுவர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

சிறப்பான பர்பார்மென்ஸ்

சிறப்பான பர்பார்மென்ஸ்

தன்னுடைய காலில் வலி இருந்தபோதிலும் மிகவும் கடுமையான ஸ்டெப்சை போட்டு நடுவர்களின் கண்டனத்திற்கும் ஆளானார். இவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறித்தான் போனார் பாவ்னி. ஆனாலும் இந்த ஜோடி தற்போது இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெற்றிக் கொண்டுள்ளது.

டைட்டிலை வென்ற ஜோடி

டைட்டிலை வென்ற ஜோடி

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது போல, இந்த ஜோடி தான் ஜெயிக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்டதுதான். இவர்கள் வெற்றி கொண்டது, அவர்களுக்கு சந்தோஷமோ இல்லையோ ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் விரைவில் காதலை உறுதி செய்து வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

சினிமாவில் கமிட்டான அமீர் -பாவ்னி

சினிமாவில் கமிட்டான அமீர் -பாவ்னி

இந்நிலையில் இந்த ஜோடி தற்போது அடுத்தக்கட்டத்திற்கும் தாவியுள்ளது. விரைவில் இருவரும் சினிமாவில் ஜோடியாக நடிக்க உள்ளனராம். புதிய படமொன்றில் இருவரும் கமிட்டாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை, டைட்டிலை வெற்றிக் கொண்ட இந்த ஜோடி பகிர்ந்துக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X