ரசிகர்கள் எதிர்பார்த்த கொண்டாட்ட தருணம்.. பிக்பாஸ் எப்ப துவங்குதுன்னு தெரியுமா.. பாக்கலாங்களா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ள தொடர் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்துள்ள நிலையில் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதனிடையே 6வது சீசனுக்கான ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முதன்மையான மற்றும் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்து 6வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 5 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

கடந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் இருந்த போதிலும் அனைவரையும் கவர்ந்து ராஜு டைட்டிலை வெற்றிக் கொண்டார். ரன்னர் அப்பாக பிரியங்கா தேர்வானார். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே, ஒரே வீட்டில் 100 நாட்களை கழிக்கும் போட்டியாளர்கள் எந்தெந்த விஷயங்களில் ஒத்துப் போகிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள், காதல் கொள்கிறார்கள் என்ற உணர்வுபூர்வமான விஷயங்களை புகுத்துவதுதான்.

காதல்களை நிஜமாக்கிய நிகழ்ச்சி

காதல்களை நிஜமாக்கிய நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி பல காதல்களை நிஜமாக்கியுள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் அமீர் -பாவனி. இவர்கள் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று டைட்டிலை வெற்றிக் கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இடையிலேயே விலக, தொடர்ந்து நிகழ்ச்சியை சிம்பு தொடர்ந்தார். அவருக்கும் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். பிக்பாஸ் அளவிற்கு இந்த நிகழ்ச்சி வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்தனர்.

அக்டோபர் 9ம் தேதி துவக்கம்

அக்டோபர் 9ம் தேதி துவக்கம்

இதனிடையே கடந்த சில நாட்களாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரமோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது நிகழ்ச்சி துவங்கவுள்ள தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X