Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிக் பாஸ் சீசன் 6க்காக காத்திருக்கும் ரசிகர்கள்... எப்போ துவங்குதுன்னு தெரியுமா?
சென்னை : விஜய் டிவியின் முன்னணி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக ஒளிபரப்பியுள்ளது.
தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் நேரலையாக ஒளிபரப்பானது.
ஆயினும் பிக் பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை கவரவில்லை. பிக்பாசின் அடுத்த சீசனுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
விக்னேஷ் சிவனை இந்திக்கு போக சொன்னேன்... நடிகர் விஜய் சேதுபதி

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு விஜய் டிவி தொடர்ந்து கொடுத்து வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து இந்த நகிழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிகளின்மூலம் மற்ற சேனல்களை காட்டிலும் டிஆர்பியில் மிகவும் சிறப்பாக உள்ளது விஜய் டிவி. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 5 சீசன்களை கடந்து சிறப்பாக ஒளிபரப்பானது. இந்த 5 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதுவும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியின் வரவேற்பை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி நேரலையாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 70 நாட்களை கடந்து ஒளிபரப்பானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பு காணப்படவில்லை. தினமும் இரவுவரை காத்திருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அட்ராசிட்டிகள், சுவாரஸ்யங்களை பார்க்கவே ரசிகர்கள் அதிகமாக விரும்பினர்.

சிம்பு தொகுத்த பிக்பாஸ் அல்டிமேட்
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் இடையிலேயே விலகினார். மீண்டும் பிக்பாஸ் சீசன் 6ல் சந்திக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்டில் இந்த நிகழ்ச்சி மீண்டும் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

யார் தொகுத்து வழங்குவார்கள்?
இந்த நிகழ்ச்சியை மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா அல்லது சிம்புவே நிகழ்ச்சியை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கமல்ஹாசன் அடுத்தடுத்த தயாரிப்பு மற்றும் நடிப்பை கமிட் செய்து பிசியாக காணப்படுகிறார். சிம்புவும் தனது நடிப்புப் பணியில் மிகவும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.