Sivaangi: தாய்லாந்து கடற்கரையில் சிவாங்கி.. குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டம்!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் சிவாங்கி.

இவரது குழந்தை தனமான பேச்சும், குறும்புத்தனங்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான பங்கை பெற்று வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக மாறி, பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார் சிவாங்கி. இவர் டைட்டிலை வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Vijay TVs Cook with comali famous Sivaangi shares her photos that makes fans more happy

தாய்லாந்தில் சிவாங்கி விடுமுறை கொண்டாட்டம்: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி மூலம்தான் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை அவர் வரவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் தனது குரல்வளத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த 3 சீசன்களில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி தற்போது குக் வித் கோமாளியின் 4வது சீசனில் குக்காக மாறியுள்ளார்.

சில விமர்சனங்களை பெற்றாலும் ஒன்றுமே தெரியாமல் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, தற்போது தன்னுடைய சமையல் திறமை மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சில இம்யூனிட்டி ரவுண்ட்களிலும் சிறப்பாக சமைத்த சிவாங்கி, நடுவர்களை வெகுவாக கவர்ந்து இம்யூனிட்டி பேண்ட்களை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியிருந்தார்.

Vijay TVs Cook with comali famous Sivaangi shares her photos that makes fans more happy

5 போட்டியாளர்கள் பைனல் சுற்றில் போட்டியிடவுள்ள நிலையில், இவர்களில் சிவாங்கி டைட்டிலை வெற்றி கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கோமாளியாக இருந்தபோது மிகவும் ஹோம்லியாக அல்லது ஒரு தீம் கொண்டு உடைகளை அணிந்து வந்தார் சிவாங்கி, தற்போது குக்காக ஒவ்வொரு வாரமும் கலக்கலான உடைகளை அணிந்து வருகிறார். இதன்மூலம் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே தற்போது தாய்லாந்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலாவில் உள்ளார் சிவாங்கி. அவர் தாய்லாந்து கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் கலக்கலான உடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது கோ லார்ன் தீவு என்றும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ஹீரோயின் போன்ற லுக்கில் அவர் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார். அம்மணிக்கு அந்த ஆசை இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vijay TVs Cook with comali famous Sivaangi shares her photos that makes fans more happy

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிவாங்கிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே தற்போது காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இதில் காசேதான் கடவுளடா விரைவில் ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X