அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி

சென்னை : பல பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி பிரபலமாக்குவதில் விஜய் டிவி முதல் இடம் பிடித்துள்ளது. இதில் பிரபலமான ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பையும் பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றதை அடுத்து, இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியும் அதிக ரசிகர்களை பெற்று, பெரும் வெற்றியை பெற்றது. வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, அதிகமான ரசிகர்களையும் பெற்றுள்ளது. பிக்பாசிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான்.

 பிரபலமான பிரபலங்கள்

பிரபலமான பிரபலங்கள்

பிக்பாஸில் கலந்து கொண்ட பலரும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். பலர் பிரபல ஹீரோக்கள் ஆகி உள்ளனர். சினிமா வாய்ப்புக்களும் குவிந்து வருகிறது. அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், சிவாங்கி, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கப்படும் நாள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

 குக் வித் கோமாளி 3 எப்போ

குக் வித் கோமாளி 3 எப்போ

லேட்டஸ்ட் தகவலின்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை விஜய் டிவி துவங்கி விட்டதாம். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறதாம். விரைவில் இந்நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

ஒரே நேரத்தில் 2 ஷோக்கள்

ஒரே நேரத்தில் 2 ஷோக்கள்

தற்போது பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை நெருங்கி உள்ள இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் துவங்கப்பட உள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், உற்சாகமும் அதிகரித்துள்ளது.

விஜய் டிவி.,யின் டிஆர்பி

விஜய் டிவி.,யின் டிஆர்பி

ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளதால் விஜய் டிவி.,யின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் மூலம் தான் விஜய் டிவி.,யின் டிஆர்பி அதிகரித்து வந்தது. இனி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் டிஆர்பி.,யில் விஜய் டிவி முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X