வதந்திகளை நம்பாதீங்க.. குக் வித் கோமாளியை விட்டு போகமாட்டேன்.. குரேஷி கட் அண்ட் ரைட்!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி தற்போது சீசன் 4ஐ ஒளிபரப்பு செய்து வருகிறது. இதில் குக்குகள், கோமாளிகளில் அதிகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியேறினார்.

இந்நிலையில் மற்றொரு கோமாளி குரேஷியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து குரேஷி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது 4வது சீசன் சிறப்பான வகையில் வாரந்தோறும் விதவிதமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. நிகழ்ச்சியில் முக்கியமான பலமே அதன் கோமாளிகள்தான் என்ற வகையில் நிகழ்ச்சி சிறப்பாக நகர்வதற்கு, குக்குகளும் நடுவர்களும்கூட சமயத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

வெளியேறிய மணிமேகலை

வெளியேறிய மணிமேகலை

குக் வித் கோமாளியின் 4வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளியான மணிமேகலையும் நிகழ்ச்சியில் இணைந்திருந்தார். ஆனால் கடந்த வாரத்தில் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இவரது விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் மணிமேகலை காரணத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

வதந்திகள் குறித்து குரேஷி விளக்கம்

வதந்திகள் குறித்து குரேஷி விளக்கம்

இதனிடையே அடுத்ததாக கோமாளியாக உள்ள குரேஷியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் மணிமேகலையை தொடர்ந்து குரேஷியும் வெளியாவதால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னதான் பிரச்சினை என்ற அளவில் பேசப்பட்டது. இதனிடையே இந்த தகவல்கள் குறித்து தற்போது குரேஷி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

வதந்திகளை நம்பாதீங்க

வதந்திகளை நம்பாதீங்க

தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகவில்லை என்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் காமெடி பண்ணாம சாகமாட்டேன். குக் வித் கோமாளியை விட்டு போக மாட்டேன். வதந்திகளை நம்பாதீர்கள் என்று குரேஷி பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளியாக குரேஷி மாறியுள்ளார். புகழ், ஷிவாங்கி, பாலா உள்ளிட்டவர்களுக்கு அடுத்தபடியாக குரேஷி மாறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாற்றங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாற்றங்கள்

விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகமான புகழை பெற்று அதன்மூலம் சினிமாவிலும் முன்னணி நடிகர்களாக மாறி வருகின்றனர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பாலாவும், மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். ஷிவாங்கியும் குக்காக மாறி பல சேலஞ்சுகளில் வெற்றி பெற்று வருகிறார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X