யாராலயும் பாட்ஷாவாக மாற முடியாது.. பாட்ஷா ஒண்ணுதான்.. குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட் உறுதி!
சென்னை :விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தனது 4வது சீசனை துவங்கி நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த சீசனின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகிறது. குக்குகள், கோமாளிகள், நடுவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. புத்தம் புதிய குக்குகள், கோமாளிகள் நிகழ்ச்சியை சிறப்பாக்கி வருகின்றனர். அடுத்தடுத்த சிறப்பான டாஸ்க்குகளால் நிகழ்ச்சி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

அடுத்தடுத்த மாற்றங்கள்
நிகழ்ச்சியின் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியின் சிறப்பிற்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளனர். இதேபோல நிகழ்ச்சியின் ஆங்கர் தர்ஷனும் தன்னுடைய பங்கை சிறப்பாக்கியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த மாற்றங்களும் நிகழ்ச்சி ரசிகர்களை கவர காரணமாகியுள்ளது.

குக்காக மாறிய ஷிவாங்கி
நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களில் கோமாளியாக களைகட்டிய ஷிவாங்கி, இந்த நிகழ்ச்சியில் குக்காக மாறி, தன்னுடைய சிறப்பான குக்கிங் திறமையை வெளிக்காட்டி வருகிறார். ஆனாலும், கோமாளியாக அனைவரையும் கவர்ந்த, அவர் குக்காக மாறுவதற்கு அதிகமாக மெனக்கெட வேண்டியுள்ளது.

கலர்புல் குக்குகள்
இதேபோல இந்த சீசனில் நடிகர் புகழ், தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். பாலா, வேறொரு நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதால் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், விசித்ரா என நிகழ்ச்சியில் கலர்புல்லான குக்குகளும் இடம்பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மணிமேகலை
இந்த வார குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பல்வேறு சுவாரஸ்யங்களை காண முடிந்தது. நடிகர் புகழ் காந்தாரா படத்தின் லுக்கில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதேபோல இந்த வாரத்துடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முடிவை கோமாளி மணிமேகலை எடுத்துள்ளார்.

பாட்ஷா ஒருவர்தான்
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நாயகிகளுக்கு இணையான கெட்டப்பில் வந்திருந்த ஷிவாங்கி, யார் வேண்டுமானாலும் பாட்ஷாவாக மாறலாம் என்று கூறினார். இதைகேட்டக் வெங்கடேஷ் பட், யாராலயும் பாட்ஷாவாக மாற முடியாது என்றும், பாட்ஷா ஒருவர்தான் என்றும் தெரிவித்தார்.

மைம் கோபி பாராட்டு
தொடர்ந்து தலைவரை மிகவும் பிடிக்குமா என்று கேள்வி கேட்டப்பட, ரத்தம், நாடி, சதை, நரம்பு எல்லாமே தலைவர்தான் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உடனடியாக நிகழ்ச்சியில் பேசிய மைம் கோபி, தன்னுடைய எனர்ஜியுடன் உடன் நடிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் கடத்துபவர் ரஜினிகாந்த் என்று பாராட்டு தெரிவித்தார்.

இதயத்தை பறக்கவிட்ட வெங்கடேஷ் பட்
இதைக் கேட்ட வெங்கடேஷ் பட், தலைவா என்று உடனடியாக இதயத்தை பறக்கவிட்டார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா என்ற பாடலை மணிமேகலை உள்ளிட்டவர்கள் பாடி நிகழ்ச்சியில் தங்கள் பங்கிற்கு ரஜினிக்கு பாராட்டு தெரிவித்தனர். இப்படியாக இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி களைகட்டியது.


Click it and Unblock the Notifications











