இன்னைக்கு ஒரு புடி.. பிரியாணி சேலஞ்சை அரங்கேற்றிய குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி!
சென்னை : விஜய் டிவியின் முதன்மையான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி தற்போது தன்னுடைய 4வது சீசனை துவங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தில் கலக்கலான பிரியாணி டாஸ்க்குடன் களமிறங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முதன்மையான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக மாறினார். இந்த வெற்றி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையிலும், சில ரசிகர்கள் அசீமிற்கு சாதகமாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அடுத்ததாக விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தனது 4வது சீசனை துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய கோமாளிகளுடன் களமிறங்கியுள்ளது நிகழ்ச்சிக்குழு. நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி தற்போது குக்காக மாறியுள்ளார்.

பிரியாணி சேலஞ்ச்
புகழ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் காணப்படுகின்றனர். அடுத்தடுத்த கலக்கல் ப்ரமோக்களுடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்த வாரமும் பல்வேறு சிறப்பு டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்துள்ளது. இந்த வாரம் பிரியாணி சேலஞ்சுடன் குக்குகள் மற்றும் கோமாளிகள் ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

புதிய ப்ரமோ வெளியீடு
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. கார்டனிங் டூல்ஸ்களை வைத்து இந்த பிரியாணியை குக்குகளும் கோமாளிகளும் தயாரிக்க வேண்டும் என்பதே இந்த சேலஞ்சாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருந்தனர். கடந்த 3 சீசன்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த நிகழ்ச்சி ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கி வருவதாக ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறப்பான நடுவர்கள்
நிகழ்ச்சியில் குக்குகள் ஒருபுறம் சமையல் திறமைகளை காட்ட, மறுபுறம் அவர்களை வெறுப்பேற்றவும் குதூகலத்தை உண்டாக்கும் வேலைகளிலும் கோமாளிகள் தொடர்ந்து ஈடுபடுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களும் சிறப்பான வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications











