twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Fun வேணுமா Fun இருக்கு.. இனிதே துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி!

    |

    சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி கடந்த 28ம் தேதி பிரம்மாண்டமான அளவில் துவங்கியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ள குக்குகள் மற்றும் புதிய கோமாளிகளுடன் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    சிறப்பான டாஸ்க்குகளை துவக்கத்திலேயே ஆரம்பித்து குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் டஃப் கொடுத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

    குக் வித் கோமாளி சீசன் 4 கலக்கல் ப்ரமோ.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா? குக் வித் கோமாளி சீசன் 4 கலக்கல் ப்ரமோ.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா?

    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

    விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 3 மாதங்கள் ரசிகர்களை கட்டிப் போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராகியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளை இந்த முடிவு ஏற்படுத்தினாலும், பலரது பாராட்டுக்களையும் அசீம் பெற்றுள்ளார்.

    குக் வித் கோமாளி சீசன் 4

    குக் வித் கோமாளி சீசன் 4

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தனது 4வது சீசனை கடந்த சனிக்கிழமை துவக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக்குகள், கோமாளிகள் என களைகட்டியுள்ளது. நிகழ்ச்சியில் ஷிவாங்கி உள்ளிட்ட 9 குக்குகள் பங்கேற்றுள்ள நிலையில் அடுத்த குக் அடுத்த வார நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக தொகுப்பாளர் ரக்ஷன் தெரிவித்துள்ளார்.

    10வது போட்டியாளர்

    10வது போட்டியாளர்

    இந்த போட்டியாளர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள மைம் கோபி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கடந்த இரு தினங்களில் ரசிகர்களை வெகுவாக கவரும் பல அம்சங்கள் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நேற்றைய டாஸ்கில் பெரிய கைகளுடன் குக்குகள் சமைத்த கலகலப்பான எபிசோட் ஒளிபரப்பானது.

    ஆர்ஜே பாலாஜி பங்கேற்பு

    ஆர்ஜே பாலாஜி பங்கேற்பு

    நிகழ்ச்சியில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்ஜே பாலாஜி கலந்துக் கொண்டார். ரன் பேபி ரன் படத்தின் பிரமோஷனையொட்டி அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். முன்னதாக சனிக்கிழமை துவங்கிய இந்த நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் களைகட்டியது. விசித்ரா, ஷிவாங்கி, காளையன், ஷெரின் உள்ளிட்ட குக்குகள் இந்த நிகழ்ச்சியில் குதூகலத்துடன் பங்கேற்றனர்.

    Fun செய்யும் நடுவர்கள்

    Fun செய்யும் நடுவர்கள்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களும் இந்த நிகழ்ச்சியில் Fun செய்து வருவது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் குக்குகளை கலாய்த்தும் கோமாளிகளை வைத்து செய்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    English summary
    Vijay TV's Cook with comali season 4 show starts with fun tasks
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X