சிறப்பாக முடிந்தது பிக்பாஸ் சீசன் 6.. அடுத்தது என்ன குக் வித் கோமாளி தான்!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 சிறப்பான எபிசோட்களுடன் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. போட்டியாளர் அசீம் டைட்டிலை வெற்றிக் கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற கிராண்ட் பைனலில் 50 லட்சம் ரொக்கம், பரிசுக் கோப்பை, கார் போன்றவற்றை டைட்டில் வின்னர் அசீம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவி மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து சிறப்பான பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களாக பிக்பாஸ் தனது 6வது சீசனை ஒளிபரப்பி வந்தது. பல்வேறு கட்டங்களில் பார்வையாளர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்துள்ளது.

வெற்றி பெற்ற அசீம்

வெற்றி பெற்ற அசீம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பை, 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் போன்றவை பரிசாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை விக்ரமன், ஷிவின் பிடித்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான ஷோக்களாக பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கி நடைபெறவுள்ளது. இதுகுறித்த ப்ரமோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட விஜய் டிவி தற்போது இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ள தேதியுடன் புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 28ம் தேதி துவக்கம்

ஜனவரி 28ம் தேதி துவக்கம்

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வரும் ஜனவரி 28ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக புதிய ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் உள்ளிட்டவர்கள் அந்த ப்ரமோவில் இடம் பெற்றுள்ளனர். நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளிட்டவர்கள் கும்பகர்ணன் வேடத்தில் பட்டையை கிளப்பியுள்ளனர்.

சீரியல்களும் ஒளிபரப்பு

சீரியல்களும் ஒளிபரப்பு

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிறகடிக்க ஆசை, மகாநதி சீரியல்களை முறையே இரவு 9.30 மற்றும் 10 மணியளவில் மீண்டும் விஜய் டிவி களமிறக்கவுள்ளது. வாரயிறுதி நாட்களில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கடந்த 3 சீசன்களை மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சமையலுடன் காமெடியை கலந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X