குக் வித் கோமாளி சீசன் 4 கலக்கல் ப்ரமோ.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா?
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வரும் ஜனவரி 28ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கவுள்ளது.
இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 3 மாதங்களை கடந்து வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவன் போட்டியிட்ட நிலையில் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில், அடுத்ததாக விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 28ம் தேதி பிரம்மாண்டமான அளவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தற்போது 4வது சீசனில் அடியெடுத்து வைக்கவுள்ளது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்
நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. நிகழ்ச்சியின் நடுவர்கள் கும்பகர்ணன் வேடமிட்டு கோமாளிகளை வைத்து செய்த ப்ரமோ முதலில் வெளியான நிலையில், அடுத்ததாக நிகழ்ச்சி ஜனவரி 28ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

குக்குகள் அறிமுகம்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் நிகழ்ச்சியின் குக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சீசன்களில் கோமாளியாக பட்டையை கிளப்பிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக்காக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்த நிலையில், தற்போது ப்ரமோவிலும் அவர் குக்காக காணப்படுகிறார்.

புதிய கோமாளிகள்
மேலும் கடந்த சீசன்களில் கோமாளிகளாக பட்டையை கிளப்பிய பாலா மற்றும் புகழ் ஆகியோர் படங்களில் பிசியாகியுள்ள நிலையில், அவர்கள் இந்த சீசனில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தெரியவந்துள்ளது. இதையடுத்து மௌனராகம் சீரியலின் ரவீனா இந்த சீசனில் கோமாளியாக களமிறங்கவுள்ளார்.

போட்டியாளர்கள் லிஸ்ட்
மேலும் இந்த சீசனில், போட்டியாளர்களாக களமிறங்கவுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் மற்றும் ப்ரமோ வெளியாகியுள்ளது. ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் ஐயப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் என அடுத்தடுத்த போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.

புத்தம் புதிய டாஸ்க்குகள்
இதனிடையே, மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து உள்ளிட்டவர்களும் கோமாளிகளாக களமிறங்கவுள்ளனர். இந்த சீசனில் புதிய முகங்கள் பலரும் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த சீசன் சிறப்பாக களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தம் புதிய டாஸ்க்குகளுடன் போட்டியாளர்களை என்கேஜ் செய்ய நடுவர்களும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











