CWC 4 :வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் கம் பேக்.. CWC நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் பதிவு!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து நிகழ்ச்சியின் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டுவந்த ஆண்ட்ரியன் தற்போது நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியின் அடுத்தடுத்த 4 பைனல் போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

Vijay TVs CWC season 4 contestant Andreanne eliminated from last show

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன ஆண்ட்ரியன் பதிவு :விஜய் டிவியின் குக் விக் கோமாளி மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக நிகழ்ச்சி அடுத்தடுத்த சிறப்பான சுற்றுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சிறப்பான டாஸ்க்குகளுடன் இதன் போட்டியாளர்கள் சிறப்பான சமையலையும், சிறப்பான காமெடிகளை கோமாளிகளும் கொடுத்துவந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் இம்யூனிட்டி ரவுண்டில் வெற்றி பெற்ற நடிகை சிவாங்கி, நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த சீசன்களில் கோமாளியாக ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது குக்காக மாற்றம் பெற்றுள்ளார். சமையலில் எதுவுமே தெரியாமல் இருந்த இவர் தற்போது இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் மேலும் 4 பைனல் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வகையில் நடந்த கடந்த நிகழ்ச்சியில், ஆண்ட்ரியன் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிவாங்கியுடன் கிரண், மைம் கோபி, விசித்ரா மற்றும ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு ர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியின் துவக்கம் முதலே இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ரசிகர்கள் மட்டுமில்லாமல், நடுவர்கள், சக போட்டியாளர்களும் இவரது சமையலை மட்டுமில்லாமல் இனிமையான தமிழையும் கொண்டாடினர். அழகான தமிழில் அனைவரையும் ஆண்ட்ரியன் கவர்ந்திருந்தார்.

Vijay TVs CWC season 4 contestant Andreanne eliminated from last show

இந்நிலையில் கடந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முற்றிலும் தான் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அன்றைய தினம் தன்னுடைய நாள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் மீண்டும் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் கம் பேக் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளியின் அடுத்தடுத்த சீசன்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இதன் 4வது சீசனும் சிறப்பான டாஸ்க்குகள், சுற்றுகள் என்று களைகட்டியது. இந்நிலையில் வைல்ட் கார்ட் சுற்றில், யாரெல்லாம் நிகழ்ச்சிய்ல இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகிறது. மேலும் தற்போது தேர்வாகியுள்ள இறுதிச்சுற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நிலையில், இறுதிச்சுற்று கண்டிப்பாக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X