Anchor DD :அடுத்த ஷோவை தொகுத்து வழங்க தயாராகும் டிடி.. ரசிகர்களும் ரெடி தாங்கோ!

சென்னை : தமிழில் பிரபல சேனல்களில் கடந்த 20 ஆண்டுகளாக ஆங்கராக இருந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

விஜய் டிவியின் ஆங்கராக டிடி உள்ள நிலையில், பிரபல ஷோக்கள், தனியார் நிகழ்ச்சிகள், இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் காலில் பிரச்சினை ஏற்பட்ட தற்போது சரியாகியுள்ள நிலையில், மீண்டும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் டிடியை காண முடிகிறது.

Vijay TVs DD going to anchor Super show enkitta mothathe season 3 soon

எங்கிட்ட மோதாதே சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் டிடி : தமிழில் விஜய் டிவியின் முக்கியமான ஆங்கராக கடந்த 20 ஆண்டுகளாக கலக்கி வருகிறார் டிடி. இளம் வயதிலேயே இவரது ஆங்கரிங் பயணம் துவங்கிய நிலையில், தற்போது வரை வெற்றிகரமான ஆங்கராக விஜய் டிவியின் பல்வேறு ஷோக்களையும் இசை வெளியீட்டு, ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் தனியார் நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். மிகவும் அமைதியான சுபாவத்தை கொண்ட டிடி, நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் தன்னுடைய கலகலப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார்.

இந்த ஆங்கரிங் நிகழ்ச்சிகளால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் டிடிக்கு கிடைத்து வருகிறது. தனுஷ் இயக்கத்தில் ப பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் சிறப்பான வரவேற்பை பெற்றார் டிடி. தொடர்ந்து சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்திலும் தன்னுடைய சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகமான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் இருந்தார் டிடி. முன்னதாக, முக்கியமான நடிகர்களின் பட பிரமோஷன்கள், பேட்டிகள் என முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே அவர் செய்து வந்தார். இந்நிலையில் யூடியூப் சேனல் மூலமும் தன்னுடைய சுற்றுலா வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஏராளமான ரசிகர்கள் இவரை பாலோ செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Vijay TVs DD going to anchor Super show enkitta mothathe season 3 soon

இந்நிலையில், அவர் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி ஒன்றை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர் தொகுத்து வழங்கிய என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் 3வது சீசனைத்தான் தற்போது மீண்டும் அவர் தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சி எப்போது, எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்த எந்த அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

டிடி எப்போதுமே தன்னுடைய நிகழ்ச்சியை தன்னுடைய கலகலப்பான சிரிப்பால், சிறப்பாக்கி விடுவார். அந்த வகையில், எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் கடந்த இரு சீசன்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்காகவும், அதன் துவக்கம் குறித்த அறிவிப்பிற்காகவும்தான் ரசிகர்கள் தற்போது வெளியிட்டிங். தொடர்ந்து தனது யூடியூபில் வெளிநாட்டு சுற்றுலா வீடியோக்களையும் டிடி வழங்குவாரா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X