Eeramana Rojave 2: ஜீவாவிற்கு தெரியவரும் கர்ப்பம் குறித்த உண்மை.. பரிதவிப்பில் காவ்யா!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2. இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

காதல், அதை தொடர்ந்த பொசசிவ்னெஸ், மறைக்கப்பட்ட உண்மை, அதையொட்டிய பிரச்சினைகள் என இந்த சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது.

சில சமயங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதித்தாலும் பெரும்பாலும் சுவாரஸ்யமான எபிசோட்களை தர இயக்குநர் முயற்சித்து வருகிறார்.

Vijay TVs Eeramana Rojave 2 serial new promo makes everyone shocking

காவ்யா கர்ப்பம் குறித்து ஜீவாவிற்கு தெரியவரும் உண்மை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது ஈரமான ரோஜாவே 2 சீரியல். அண்ணன் தம்பிகளான பார்த்திபன், ஜீவா மற்றும் அவர்களை மணந்துக் கொள்ளும் தங்கை, அக்காவாக காவ்யா, ப்ரியா என இந்தத் தொடர் சுவாரஸ்யமான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பார்த்திபனுக்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட, திருமண நாளன்று கடத்தப்படுகிறார் பிரியா. இதையடுத்து, அவரது தங்கை காவ்யாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

முன்னதாக பார்த்திபனின் தம்பி ஜீவாவை, காவ்யா காதலித்த நிலையில், பார்த்திபனை திருமணம் செய்யும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார். இதையடுத்து ஜீவா -பிரியா திருமணமும் நடக்கிறது. இவ்வாறு ஜோடி மாற்றி திருமணம் நடைபெறும் சூழலில் இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை வெளியிட்டு வருகிறது ஈரமான ரோஜவே சீசன் 2 தொடர்.

தொடர்ந்து தற்போது எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து இரு ஜோடிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவ்யாவை ஏற்க முடியாமல் பார்த்திபனும் ஜீவாவை ஏற்க முடியாமல் பிரியாவும் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், அவர்களது முந்தைய காதலை தங்களிடம் மறைத்ததுதான். ஒவ்வொருவரும் முந்தைய காதலை மறைக்கத்தான் செய்வார்கள் என்ற அடிப்படையான புரிதல் இல்லாத கேரக்டர்களாக இவர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

Vijay TVs Eeramana Rojave 2 serial new promo makes everyone shocking

இந்நிலையில், தற்போது காவ்யா கர்ப்பமாக உள்ளார். பார்த்திபன் தன்னை ஏற்காத நிலையில், தன்னுடைய கர்ப்பத்தை காவ்யா, பார்த்திபனிடமும் குடும்பத்தினரிடமும் மறைக்கிறார். கர்ப்பத்தை எவ்வளவு நாட்கள் மறைக்க முடியும் என்ற அடிப்படை இல்லாமல் இந்த கேரக்டர் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவ்யாவின் கர்ப்பம் குறித்த உண்மை தற்போது ஜீவாவிற்கு தெரியவருகிறது. அவர் மிகுந்த உற்சாகத்துடன் தன்னுடைய வாழ்த்துக்களை காவ்யாவிற்கு தெரிவிக்கிறார்.

ஆனால் தான் இந்த விஷயத்தை பார்த்திபன் உள்ளிட்ட யாரிடமும் சொல்லவில்லை என்று கூறுகிறார் காவ்யா. பார்த்திபனுடன் தான் வாழவில்லை, தாங்கள் பிரிந்தே இருக்கிறோம் என்ற உண்மையையும் அவர் ஜீவாவிற்கு தெரியப்படுத்துகிறார். இதனால் ஜீவா அதிர்ச்சியடைகிறார். இந்நிலையில், தான் கூறும்வரை இந்த விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார் காவ்யா. இதற்கு ஜீவாவும் ஓகே சொல்லும்படியாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X