Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போதை தலைக்கேறிய ஜீவா.. பலபேர் முன்னிலையில் அடித்து துவைத்த ப்ரியா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்.
இந்தத் தொடரில் மணப்பெண் ப்ரியா கடத்தப்பட ஜோடி மாறி திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோரின் 60ம் கல்யாணத்தில் பிரச்சினை ஏற்பட குடும்பமே தற்போது திக்கு முக்காடியுள்ளது.
மாமியாரே இந்த ஆட்டம் ஆடுனா எப்படி..ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையை கிண்டலக்கும் நெட்டிசன்ஸ்!

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்தத் தொடரின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசனும் பரபரப்பான எபிசோட்களை தந்து வருகிறது. திருமணத்தின்போது ப்ரியா கடத்தப்பட, ஜோடி மாறி திருமணம் நடைபெறுகிறது. இதையடுத்து ஒருவரையொருவர் காதலித்துவந்த ஜீவா மற்றும் காவ்யா, ப்ரியா மற்றும் பார்த்தியுடன் மனதளவில் ஒன்ற முடியாமல் தவிப்பதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.

நின்று போன 60ம் கல்யாணம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த தன்னுடைய மாமனாரின் நண்பர், தன்னையும் ஜீவாவையும் ஹோட்டல் அறையில் வைத்து பார்த்து அட்வைஸ் செய்த நபர் என்பதை காணும் காவ்யா, கோயிலில் இருந்து வெளியேறுகிறார். அவர் தன்னுடைய மாமியாரிடம் உண்மையை சொல்லிவிட்டுதான் செல்கிறார். ஆனால் இவ்வாறு தன்னுடைய மகனுக்கு காவ்யா துரோகம் செய்ததை நினைத்து அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.

வில்லத்தனம் செய்யும் மாமியார்
காவ்யா தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற தாலியையும் அவர் மறைத்த நிலையில், காவ்யா மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபம் கொள்கிறது. திருமணமும் நிற்கிறது. இதையடுத்து காவ்யா வீட்டிற்கு வர, அவரிடம் குடும்பத்தினரின் கோபம் எதிரொலிக்கிறது. அவர் தனது நிலையை கூறக்கூட வாய்ப்பு தராமல், பார்த்தி, காவ்யா முன்னதாக கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார்.

தாறுமாறாக குடிக்கும் ஜீவா
ஆனால் தற்போது இதை ஏற்கும் மனநிலை காவ்யாவிற்கு இல்லை. இதனிடையே, காவ்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாறுமாறாக குடிக்கும் ஜீவா, காவ்யாவை தன்னிடம் இருந்து பிரித்த சாமியிடம் சென்று முறையிடுகிறார். அவரை தடுக்கும் அவரது மாமா மற்றும் கோயில் குருக்களையும் பிடித்து தள்ளிவிடுகிறார். இதனால் அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அவரை தடுக்க முடியாமல் அனைவரும் நிற்கின்றனர்.

ஜீவாவை அடிக்கும் ப்ரியா
இதனிடையே கோயிலில் சாமி கும்பிட வந்து, அடிப் பிரதட்சனம் செய்யும் பிரியா, ஜீவா குடித்துவிட்டு செய்யும் கலாட்டாவால் கோபம் அடைகிறார். தொடர்ந்து ஜீவாவை கன்னத்தில் நான்கைந்து முறை ஓங்கி அறைகிறார். இதையடுத்து இந்த விஷயம் குறித்து கேள்விப்படும் ஜீவாவின் அம்மா, எது எப்படி இருந்தாலும் பலபேர் முன்னிலையில் ஜீவாவை பிரியா அடித்தது தவறு என்று கூறுகிறார்.

மன்னிப்பு கேட்க மறுக்கும் ப்ரியா
தொடர் பிரியா செய்த செயலுக்காக அவரை ஜீவாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் தான் செய்தது தப்பு இல்லை என்று கூறும் ப்ரியா, ஜீவாவிடம் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தனது மாமியாரிடம் சொல்கிறார். இவ்வாறு தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. ஏற்கனவே காவ்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது ப்ரியாவின் வாழ்க்கை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா.. அடுத்த ரவுண்ட் தளபதி 67 அப்டேட் ஸ்டார்ட்!
-
கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ தாமதம் ஏன்.. இதுதான் காரணம்!
-
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!